பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
59

காலந்தோறும் மாறிவந்த இலக்கிய வடிவங்களும் போக்குகளும்

தமிழ் இலக்கிய வளர்ச்சி சுவையான வரலாறாகும். இரண் டாயிரம் ஆண்டுக்கால வளர்ச்சிப் போக்கில் எத்தனை யெத் தனையோ மேடு பள்ளங்கள். சமய உந்துதலாலும் சமுதாயப் போக்காலும் புதுப்புது வடிவங்கள் எழுந்து தமிழை செழிப்பூட்டி வளர்த்தன. இவ்விலக்கியங்கள் காலந்தோறும் சமுதாயத்தில் ஏற்பட்டு வந்த மாற்ற திருத்தங்களை, போக்குகளை விண்டு ரைக்கும் சான்றுகளாகவும் அமையத் தவறவில்லை. இவ்வர லாற்றுப் போக்கை சங்ககாலம் தொடங்கி ஆராய்வோம்.

சங்க கால இலக்கியப் போக்கு

சமய உணர்வுகள் அழுந்தக் காலூன்றாத தொல்காப்பிய காலத்திலும், சங்க இலக்கியக் காலத்திலும் கற்பனை அதிகம் கலவாத, உள்ளதை உள்ளவாறே கூறும் இலக்கியங்கனே

அதிகம் உருவாயின.

சங்க கால சமுதாயம் காதலையும் வீரத்தையும் வெகுவாகப் போற்றியது. திரைகடலோடி திரவியம் தேடும் பொருள் வேட்கை யும் வீரமும் தமிழனின் ஆற்றலை அளக்கும் அளவுகோல்களாகக் கருதப்பட்டன. எனவே, தமது வாழ்வையே அகமாகவும் புற மாகவும் கண்டு மகிழ்ந்தனர். புலவர்களும் அக்கால சமுதாயப் போக்குக்கேற்ப அக இலக்கியங்களாகவும் புற இலக்கியங் களாகவுமே எழுதிக் குவித்தனர்.

வடமொழி இலக்கிய இறக்குமதி

வைதிக சமயம் தமிழகத்தில் பரவிய போதிலும், அதன் நான்கு வேதங்களும் வடமொழியாகிய சமஸ்கிருதத்திலேயே இருந்ததனால், அதனைத் தமிழில் தர வைதிக பார்ப்பனர் விரும்பவில்லை. அதனால் அவர்களுக்கும் மக்களுக்குமிடையே மாபெரும் இடைவெளி இருந்தே வந்தது. ஆங்காங்கே இருந்த மன்னர்களும் மேற்குடியினரும் அவர்களோடொத்தவர்களும் மட்டுமே அவர்கட்குக் குறுகிய அளவில் ஆதரவளித்து வந்தனர். நேரடியாக வேதவுரைகள் மக்களிடையே தமிழ் வாயிலாக பரவா