பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

91

பொறுமை, திறமைக் குறைவு

இனி, தமிழில் அறிவியல் புனை கதைகள் இதுவரை பெரு மளவில் புனையப் படாமைக்கான காரணங்களை ஆராயுங்கால் விஞ்ஞான அறிவாற்றல் மிக்க தமிழ் எழுத்தாளர்களின் எண்ணிக்கையும் விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலேயே உள்ளது. இத்தகையவர்களும் ஆங்கில மொழியிலுள்ள அறி வியல் நூல்களைத் தொடர்ந்து படித்து, நம் வாழ்க்கைச் சூழலுக் கேற்ப அறிவியல் உண்மைகளை அடியொற்றி, புதிய போக்கில் கதை புனையும் பொறுமையும் திறமையும் இவர்களிடம் சற்று குறைவாக உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.

அறிவியல் கவிதைகள்

மேனாடுகளில் உரைநடை இலக்கியமாக அறிவியல் புனை கதைகள் உருவாக்கப்படுவது போன்றே அறிவியல் உண்மை களை அடியொற்றிய கவிதை நூல்களும் இயற்றப்பட்டு வரு கின்றன. உரை நடையைக் காட்டிலும் மிகுதியான இலக்கியச் செறிவை இத்தகு அறிவியல் கவிதை இலக்கிய நூல்களில் காண முடிகிறது. சான்றுக்கு ஆங்கில அறிவியல் கவிதைகளில் ஒன் றைக் காண்போம்.

அணுசக்தி தயாரிப்புக்கு இன்றியமையாது தேவைப்படுகிற "புளுட்டோனியம்' (Plutoniam ode) உலோகத்தைப் பற்றி ஆலென் கின்ஸ்பெர்க் எனும் அறிவியல் இலக்கியக் கவிஞர்

பாடுகின்றபொழுது,

"கதிரியக்க வினைப் பயனே! கருப்பான, ஊமையான, பேச்சற்ற, மோப்பமற்ற உண்மைத் தோற்றத்தின் வெடிப்பாக நீ

தொடக்கத்தில் இருந்தாயா? நானூறு கோடி ஆண்டுக்குப்பின் உன் பெயரை

நான் வெளிப்படுத்துகின்றேன் நிலவுலகு பிறந்த இரவுதான் உன் பிறந்த

நாளென ஊகிக்கிறேன் : கடவுளர்போல் கம்பீரமாக நிலைத்து

நிற்கின்றாய் நீ என் முன்னே, உனக்குத் தலை வணங்குகிறேன். ஹான் ஃபோர்டு, சாவன்னா ஆறு

ராக்கி பிளாண்ட்ஸ். பான்டெக்ஸ், பர்லிங்டன், ஆல்புகர்க் இவற்றிலுள்ள