பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
97

97

இவ்வறிவியல் கவிதை நூலின் மற்றொரு சிறப்புக்கூறு கவிதை படிக்கத் தெரிந்த சிறுவர் முதல் பெரியவர்கள் வரை எளிதாகப் படிக்கத்தக்க முறையில் சொல்லாட்சியும் தெளிவும் இணைய நூலின் கரு அமைந்துள்ளது. எளிதாக வாய்பாடு, போன்று மனனம் செய்ய ஏற்றதாகவும் விளங்குவது இச்செய்யுட் களின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

இதைப் போன்ற செய்யுள் வடிவிலான அறிவியல் விளக்க நூல்கள் தமிழில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் இது வரை முழு அளவில் வெளிவரவில்லையென்பது எண்ணிப், பார்க்க வேண்டிய ஒன்றாகும்

சிறுவர் அறிவியல் இலக்கியங்கள்

அறிவியல் கண்டு பிடிப்புகளைப் பற்றி சிறுவர் பாடல்களாக அரு சோமசுந்தரன் ஒரு நூலை எழுதியுள்ளார்.

அறிவியலின் சில அம்சங்களைப் பற்றித் தனித்தனிக் கவிதை கள் பல க ஞர்களால் இயற்றப் பட்டுள்ளனவென்றால் அவை சிறுவர்களுக்கான கவிதைகளேயாகும்.

பெரியவர்களுக்கான அறிவியல் புனை கதைகளைக் காட்டி லும் சிறுவருக்கான அறிவியல் கதை இலக்கியங்கள் அதிகம் வெளிவந்துள்ளனவென்றே கூற வேண்டும் குழந்தைகளுக்கென இதுவரை எழுதப்பட்டு வெளிவந்துள்ள சிறுவர் இலக்கியங்கள் சுமார் 2,500 ஆகும். இவற்றில் 400 சிறுவர் நூல்கள் அறிவியல் செய்திகளைக் கூறும் படைப்புகளாகும். இந்நூல்கள் அறிவியல் ஆதாரத்துறைகளான உயிரியல், உடலியல், விலங்கியல், தாவரவியல், விண்வெளியியல், நிலவியல் ஆகியன பற்றியவை களாகும். இந்நூல்களில் பொதுவான அறிவியல் தகவல்களே அதிகம் இடமபெற்றுள்ளன. இப் பட்டியலில் அறிவியல் பாட நூல்கள் இடம் பெறவில்லை.

இந்நூல்கள் அறிவியல் அடிப்படைச் செய்திகளை சுவை யாகக் கூறும் வகையில் படைக்கப்பட்டவைகளாகும். சில கதைப் போக்குபோல் அமையும் உரைநடைச் சித்திரங்களாகும். அறிவியல் உண்மைகளை அடிப் படையாகக் கொண்டு கதை வடிவில், உரிய பாத்திர அமைப்புகளுடன் வெளிவந்த சிறுவர் அறிவியல் புனைகதைகள் வெகுசிலவே யாகும். மேனாட்டவ ரோடு ஒப்பிடும் அளவுக்குத் தகுதிமிக்க சிறுவர் அறிவியல் கதை

7