பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

104 இவருடன் பிறந்தவர்கள் திரு அருணகிரிக் காலிங்க ராயர் திரு கதிர்வேல் காலிங்கராயர் என்னுமிருவராவர். இவருடைய சகோதரியார் திருமதி அகத்தூர் அம்மாள் அவர்கள் பழையகோட்டைப் பட்டக்காரர் திரு நல்ல சேனாதிபதிச் சர்க்கரை மன்றாடியார் அவர்களின் வாழ்க்கைத் துணைவியாராவார். பட்டக்காரர் அவர் களின் சகோதரியார் திருமதி ருக்மணி அம்மையாரை வாழ்க்கைத் துணைவியாகப் பெற்று வாழ்ந்த இல்வாழ்வில் மக்கட் செல்வங்களாகக் கிருஷ்ணராஜ் காலிங்கராயர், வெற்றிவேல் காலிங்கராயர், மோகன்ராஜ் காலிங்கராயர், அருண்குமார் காலிங்கராயர் எனும் நான்கு ஆண் மக்களும் சித்திரகலா காலிங்கராயர் என்ற பெண்ணும் உள்ளனர். மோகன்ராஜ் காலிங்கராயர் பொள்ளாச்சித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பார் அகத்தூர் முத்து ராமசாமிக் காலிங்கராயர் அவர்கள் தம் மைத்துனர் பழையகோட்டை இளவல் அர்ஜுனன் அவர்கள் போலவே பெரியார், அண்ணா ஆகியோர்மீது மிகுந்த பற்றுக்கொண்டு விளங்கினார். சமூக சீர்திருத்தம், பொதுமைக் கொள்கை ஆகியவற்றின் மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். மாவட்டத்தில் அரசியல் இயக்கங்களில் நேரடியாக ஈடுபடாமலேயே அவைகட்கு வழிகாட்டியாக விளங்கினார். அஞ்சாமையும், ஆற்றலும், பேரறிவும் கொண்டு பொதுப் பிரச்சனைகளை அணுகினார். கோவை யில் அண்ணா சிலை நிறுவியது இவர்கள் முயற்சியாலே யாகும். அண்ணா நினைவாக இன்னும் பல நிறுவனங்களை ஏற்படுத்துவதாக இருந்தார். அதற்குள் அவர்கள் 20-11.1966 இல் அமரர் ஆனார்கள்.