பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 (செம்பன் குலத்தினர்) குன்னத்தூர்க் (கணவாளர்) கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

காலிங்கராயனுக்குப் பின் வந்த சாத்தந்தை குலத்தினர் பலரும் காலிங்கராயக் கவுண்டர் என்று பிற்காலம் வரை பெயர் வைத்துக் கொண்டதைக் கொங்குக் காணியான பட்டயம், மதுக்கரைப் பட்டயம், அகிலாண்ட தீட்சிதர் செப்பேடு ஆகியவற்றால் அறிகின்றோம்.

எனவே தமிழகமெங்கும் பல அரசர்கள் பல்வேறு காலங்களில் தங்கள் மிக உயர்ந்த அதிகாரிகட்கு வழங்கிய சிறப்பான பெயராகிய காலிங்கராயன்' என்ற பெயரையே நமது அணையும் கால்வாயும் அமைத்த அருளாளராகிய தலைவரும் பெற்றுள்ளார். நம் தலைவர் ஒருவரே பாண்டியர் நாளில் கொங்கு நாட்டில் இப்பெயர் தாங்கி இணையிலாது ஓங்கி அதிகாரம் செலுத்தி வசையொழித்து இசைகொழித்து வாழ்ந்தவராகின்றார். சிறப்புமிகு இக் காலிங்கராயன் என்ற பட்டம் பெற்றதால் அவர் பாண்டிய மன்னர்களிடம் பெற்றிருந்த உயர்வும் பெருமையும் மதிப்பும் நன்கு புலனாகிறது.