பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 258


எழுதினார். 'நவாபினுடைய நாடு, தஞ்சாவூர் அரசருடைய நாடு இவற்றின் நிர்வாகங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. நிர்வாகம் அவர்களிடம் கொடுக்கப்படவில்லை. எனவே உங்கள் வாரியத்தின் (போர்டின்) பெயரையும் அதற்கேற்றபடி மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த உத்தரவுக்குப் பிறகு அந்த வாரியம் (போர்டு) 'வரிவசூல் ஆக்கிரமிப்பு போர்டு' என்று அழைக்கப்பட்டது. இந்த வாரியம் (போர்டு) வரிவசூல் வாரியத்தி லிருந்து (போர்டிலிருந்து) தனிப்பட்டதல்ல. ஆனால் அதனுடைய வேலையைச் செய்யும் ஒரு துறையாகக் கருதப்பட்டது.

இந்த ஆணை விளம்பரப்படுத்தப்படுவதற்கு முன்னமேயே பல ஒழுங்குகள் செய்யப்பட்டன. (எனக்குக் கிடைத்த பிரதியில் 150 ஆம் பக்கத்தில் சில பத்திகள் காணப்படவில்லை. - ந.ச.)

1791-பாளையங்கோட்டையில் பயிராக்கப்பட்ட இலவங்கப் பட்டையின் மாதிரிகள் மதராசுக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெற்றது. திரு. டோரின் முசுக்கொட்டை செடிகளை (Mulberies) பயிர் செய்யத் தொடங்கினார். இலவங்கப்பட்டை சாகுபடி டோரின் அவர்களால் தென்காசி வரை விரிவாக்கப்பட்டது. இத்தகைய இன சாகுபடி செய்தவரை 1800 ஆம் ஆண்டு திரு. காசாமேஜர் (இவர் பெயரால் ஓர் ஊரும் உள்ளது) பார்க்க - டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளையின் தமிழின்பம்-ந.ச.) என்பவர் குற்றாலத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தார் என்றும் சொல்லப் பட்டிருக்கிறபடியால் ஒரு வேளை குற்றாலம் குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி டோரின் திருநெல்வேலி பாளையக்காரர்களின் ஒழுங்கு நடவடிக்கைகளைப் பற்றிய குறிப்பு ஒன்றைக் கவர்னர் ஜெனரல் வார்டு கார்ன்வாலிசு (Lord Cornwallis) பிரபுவுக்குத் தெரிவிப்பதற்காக அரசாங்கத்திற்கு அனுப்பினார். அதில் சிவகிரி பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்களுக்குக் கர்னல் புல்லர்ட்டன் காட்டிய சலுகைகள் அவர்களுடைய கலகம் செய்யும் குணத்தைத் தூண்டுவதற்கு ஏதுவாக இருந்தன என்றும், குறிப்பாகப் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்கள் தரப்பில் மேலும் தீவிர நடவடிக்கைகளை மேற் கொள்ள பரிவுரை செய்யவேண்டுமெனவும் கூறியிருந்தார். ஓர் இராணுவக் காவல்படை பூலித்தேவரின் கோட்டையைக் கைப்பற்ற அனுப்பப்பட்ட தென்றும் ஆனால் தேவரின் ஆட்கள் இராணுவ வீரர்களை அப்படியே ஆயுதங்களுடனேயே தூக்கிச் சென்று கோட்டைக்கு வெளியே விட்டு விட்டனர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிகழ்ச்சி நம்முடைய ஆதிக்கத்தினிடம் அவர்கள் கொண்ட அச்சத்தையும் எதற்கும் பணியக்