பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 324


20 அடி தூரத்திலிருந்து வேல்களால் நடத்தப்பட்டது. அதற்கப்பால் மனிதர் கூட்டம் ஒன்று உயர்ந்த ஓர் இடத்தில் ஓயாது நெருப்பூட்டிக் கொண்டிருந்தது. கோட்டையிலுள்ள மற்றவர்கள் எதிரிகளைப் பக்க வாட்டில் தாக்கினர். இக்குழப்பத்தில் பிளவினருகிலிருந்து நெருப்புக்கருகில் வைக்கப்பட்ட குட்டைப் பீரங்கி ஒன்றைக் கைப்பற்ற ஒரு அதிகாரியும் ஏறக்குறைய 50 சிப்பாய்களும் சென்றனர். அவர்களுள் ஒரு அதிகாரியும் பல சிப்பாய்களும் இறந்தனர். வேறு இரண்டு அதிகாரிகளும் ஐந்து அல்லது ஆறு சிப்பாய்களும் காயமடைந்தனர். எதிரிகளின் சார்பில் ஏற்பட்ட இழப்பைப் பற்றிய கணக்கு எங்களுக்குத் தெரியாது. (உம்! - ந.ச.) கோட்டையிலிருந்து பத்திரமான இடத்தை அடைந்த உடனேயே அங்கு படை அணிவகுக்கப்பட்டது; கூடாரத்திற்கான இடம் குறிப்பிடப்பட்டது. அந்த இடம் கோட்டைச் சுவரிலிருந்து மிக அருகே ஏறக்குறைய 1500 மூவடி தூரத்தில் அமைந்திருந்தது. கோட்டைக்கு இணையாகச் சென்ற அணிவகுப்பின் நடுவில் ஒரு உயர்ந்த கூடல்வாய் இருந்தது. எங்களுடைய படைகளும் மற்ற சேமிப்புப் பொருள்களும் எதிரிகளின் கண்களுக்குத் தெரியாவண்ணம் அதன்பின் வைக்கப்பட்டன. முதலில் எந்த இடத்தில் பிளவு உண்டாக்க முயற்சித்தோமோ அந்தக் கரையில் எங்கள் காவலர் நிறுத்தப்பட்டனர். கூடார நிழலில் நாங்கள் எல்லாரும் ஒரே விதமான அபாயங்களுக்கும் அல்லல்களுக்கும் உட்பட்டதால் எங்களிடையே வழக்கத்திற்கு மாறான அமைதி நிலவியது. அந்த அமைதி ஒன்றுதான் அன்று எங்களை விட்டுப் பிரிந்த உடன் பிறந்தவர்களின் நினைவுக்காகச் செலுத்தப்பட்ட நன்றிக் கடனாகும். அந்தவரை எதிரிகளும் எங்களுடைய துக்கத்திற்கு மதிப்பளித்து, நாங்கள் அல்லல் அற்ற அமைதியில் ஆழ்ந்திருக்க விட்டுவிட்டனர்.

எங்களுக்கு இன்று ஏற்பட்ட தோல்விகள் அனைத்தும் உறுதியாக நீதிக்குப் புறம்பானது. (ஓ! அது என்ன நீதியோ! - ந.ச.) பிளவு எவ்வாறு காக்கப்பட்டது என்பதே விந்தையான செயலாகும். ஏனெனில் உடைந்த கைப்பிடிச் சுவருக்கு மேலே இருந்து கோட்டையை உண்மையாகக் காத்தவர்கள் ஒருவரும் தலைகாட்டவே இல்லை. உறுதியாக அச்சுவர் முழுவதும் அழிக்கப்பட்டது. எங்களுடைய தாக்குதலுக்கு நீண்ட நாட்களுக்கு முன்பே கோட்டையின் கொத்தளத்திற்கு ஏறக்குறைய வாய்ப்புகள் நிரம்பிய வழி ஒன்று செய்யப்பட்டிருந்தது. ஆயினும் இங்கு ஈட்டித் தொடர்கள் மட்டுமே எங்களுக்கு காட்சி தந்தது. மற்ற ஒவ்வொரு வேலையிலும் ஈடுபட்ட எதிரியின் ஆட்கள் சிறிதும் கட்டுப்பாடின்றி முற்றுகையை மறைத்துக் கொண்டு நின்றனர். இவ்வாறு நின்ற ஒவ்வொருவரும் உடனுக்குடன் எங்கள் வீரர்களால் சுடப்பட்டனர். எனினும், அடிக்கடி அந்த இடத்தில் வேறு