பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108


ஒம் பேரு ?”
  • மயில் சாமி !'

ஐயோ, இவனச்சும் எம் மவன் மாணிக்கமா இருக்கப் படாதா ?” - " ஒனக்கு அப்பன் ஆயி...?” ‘ எல்லாம் இனி நீதான், தாயே. நான் நாதியத்த அநாதை. வெறகு வெட்டிப் பொளைச்சுச் சேத்த பணம் கொஞ்சம் வச்சிருக்கேன். நாளைய தொட்டு எனக்கு நீதான் சோறு போடணும் ' என்று செருமலுடன் விவரம் வைத் தான் மயில் சாமி. - - மாரியின் வலக் கையில் ஊசலாடிய பத்து ரூபாய் நோட்டுப் பரப்பிலே அவன் தாய் நின்ருள். அவன் வெறி பிடித்தவன் போன்று அங்கிருந்து செல்ல எத்தனம் செய் தான். - - ' அண்ணுத்தே, இரு. நானும் ஓங்கூட வாரேன்.”வாசலில் வந்து நின்ருர்கள்.

  • ஊஹூம், நான் ஒடனும். எங்க அம்மாவுக்குக் கடுமையான காச்சல். இந்தப் பத்து ரூபாய்க்கு டாக்டரு சொன்ன ஊசி கெடைக்குமோ, கெடைக்காதோ, புரி யலேயே சரி, நான் போறேன்.”

நில்லு அண்ணுத்தே. ஒன் கதையும் காரணமும் என்னேக் காட்டியும் பரிதாபமா இருக்குது. இந்தா, இருபத் தஞ்சு ரூபா. வா, நானும் ஒன்கூடவே வாரேன். ஒன் அம்மாளுக்கு வேண்டியதை வைத்தியம் செய்யுவோம். அப் பாலே நீ எனக்குத் தந்துப்பிடு, போதும். எனக்கென்ன, அப்பளு, அம்மாவா? நீ கொடுத்து வச்சவன் ; ஒனக்கு அம்மா இருக்கு. ஆமா, நீ இப்பச் சொன்னது அம்பட்டும் நேசம்ா, இல்லே...!" அடுத்த கணத்தில், மயில்சாமியின் கன்னத்தில் பளி ரென்று அறைந்த பெருமை மாரியைச் சேரும்.