பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59


விட்ட அந்த அழகுச் சிறுவன் நிழலாடியிருக்க வேண்டும். அன்பின் ஈரம் விழிக்ளுக்குத் தாவியதோ ?

  • ம். சாப்பிடுங்க !’
  • - gositif !**

சேர்வைக்காரர் கருக்கரிவாள் மீசையை ஒதுக்கி விட்டுக் கொண்டு, பொங்கலைக் கிள்ளி ஒரு துணுக்கை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளப் போளுர், அதற்குள் 3 "ஐயா !” அவர் நிமிர்ந்து பார்த்தார். புதையல் எடுத்த தனமாக அவரது நெஞ்சில் அந்தரங்கத்தில் குதுாகலம் பிசிறு தட்டி ஊற்றெடுத்தது.

  • யாரு இந்தப் பொடிசு ? வள்ளியம்மை இனம் புரியாத் தவிப்படைந்தாள் ; இனம் புரிந்த பாசத்துக்கு அடிமைப் பட்டாள் ; அவனை விழுங்கி விடுபவள் மாதிரி பார்த்தாள்.
  • வாப்பா, தம்பி, வா !”

தேநீர்க் கடையில் தரிசனம் கொடுத்துச் சென்ற அந்தப் பொடியன் அதே பழைய அமர்த்தலோடும், ஆணவத் தோடும் அகம்பாவத்துடனும் சிரித்தான். விதியைப் போலவா? இல்லை, தெய்வத்தைப் போலத் தானே ? ' குந்து, தம்பி ' என்ருர் சேர்வை. இந்தச் சிறுவனப் பற்றி வள்ளியம்மையிடம் சொல்ல வேளை கணித்துக் கொண் டிருந்தவர் சேர்வை. இப்போது, அவனே வந்து விட்டானே? இவன் கதையைக் கேட்டு, எல்லாம் அனுசரணையாக வாய்த் தால் இவனேயே சுவீகாரம் எடுத்துக்கொண்டால் என்ன ? ஆத்தா மகமாயி!... பாசம் புதுப்புனலாயிற்று.

  • தம்பி, உட்காரேன் !’
  • தம்பியா? திரும்பத் திரும்பச் சொல்lங்களே ! நான் உங்க தம்பியா ?”