பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குறிப்பும் - சிறப்பும்

காலமும் கால் பந்தாட்டமும்

காலத்தால் பழமையானது, காட்சிக்கு இனிமை யானது கால்பந்தாட்டம். காண்பவர்க்குக் கவர்ச்சி யையும், கலந்து கொண்டு ஆடுவோருக்கு எழுச்சி மிகுந்த களிப்புணர்ச்சியையும் கொடுக்கும் இந்த ஆட்டம், ஒர் செழுமையான ஆட்டமாகும். வளமோடு முழுமையாக வளர்ந்து, மனித இனத்தின் மறுமலர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும், உடல் கிளர்ச்சிக்கும் உறுதுணையாக உலா வருகிறது இந்தக் கால் பந்தாட்டம்.

'நல்ல உடல் வலிமையுள்ளவர்களாலேயே ஆட முடியும்’ என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்