பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 கால ஆராய்ச்சி சாஹிப் திரு.எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் கருத்தும்' இம்முடிவுக்கு அரண் செய்தல் இங்கு அறியத்தகும். நடுவு நிலையினின்றும் மேற்சொன்ன காரணங்கள் பலவற்றையும் ஆய்ந்து இம்முடிவு கொள்ளப்படின், இக்கோச்சோழனை அடுத்து, மேற்சொன்ன இடைக்காலத்தில் இருந்தவராக (பெரிய புராணம் கூறும்) புகழ்ச்சோழரை எடுத்துக் கொள்ளலாம். இவர் பெயர் சங்க நூல்களில் இல்லாததாலும் சிம்மவிஷ்ணுவுக்குப் பிறகு பல்லவர் காலத்தில் இத்தகைய சோழப் பேரரசர் இருக்க முடியாமையாலும், இந்த இடைக்காலமே இவர் வாழ்ந்த காலம் எனக்கோடல் பெரிதும் பொருத்தமேயாகும்." அச்சுதன் போன்ற களப்பிரப் பேரரசனும், கோச்செங்கணான் புகழ்ச்சோழர் போன்ற சோழப் பேரரசரும் கி.பி. 5, 6 ஆம் நூற்றாண்டுகளில் இருந்தமையாற் போலும் பல்லவர் சோழநாட்டைக் கைப்பற்றக் கூடவில்லை! கோச்செங்கணான், புகழ்ச் சோழர், களப்பிர அரசராகிய கூற்றுவ நாயனார்" இவர்களை இவ்விடைப்பட்ட காலத்தவராகக் (சுமார் கி.பி. 450-500) கொள்ளின், தென் இந்திய வரலாற்றில் இருண்ட பகுதி எனப் பட்ட காலத்தின் ஒரு பகுதி வெளிச்சமாயிற்றெனக் கொள்ளலாம். இவ்விருண்ட காலம்-பல்லவர் காஞ்சியைத் துறந்து தெலுங்கு நாட்டில் வாழ்ந்த காலம்-சோழர் இடையீட்டுக் காலமாக இருத்தல் வேண்டும் என்று வெங்கையா போன்ற கல்வெட்டறிஞர் கொண்ட கருத்தில்" ஒரளவு உண்மையுண்டு என்பதும் இதனால் உறுதிப்படும். குறிப்புகள் செ. 6, 16. செ. 14, 39. களவழி, நாட்டார் பதிப்பு, முன்னுரை, ப. 5. திருநறையூர்ப் பதிகம், செ. 8. திருநறையூர்ப் பதிகம், செ. 6, 5, 3, 4, 9 தென்னவனாய் உலகாண்ட செங்கணான் என்ற சுந்தரர் தொடர், இதனுடன் ஒப்பு நோக்கத் தக்கது. 7. கோச் செங்கட் சோழர் புராணம், செ. 15, 16. 8. கோச் செங்கட் சோழர் புராணம், செ. 7. 9. Ep. Ind. III. p.142. 10. Ibid, Fr. Heras, Studies in Pallava History, p.20. 11. Vide his Tirikadukam & Sirupanjamulam, University Publication, pp. 10-11, 75. 12. C.V.N. Iyer's ‘Origin and Development of Saivism in S.India', p.183. 13. C.V.N. Iyer's ‘Origin and Development of Saivism in S.India, pp. 180-181. 14. Indian Antiquarry 1908, p. 284. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/107&oldid=793112" இலிருந்து மீள்விக்கப்பட்டது