பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 கால ஆராய்ச்சி எனின், மனக்கோவில் கட்டிய இப்பெரியவரைப் பற்றிச் சுந்தரர் பாடியிருப்பார் அன்றோ இராசசிங்கனைப் புகழ்ந்த சுந்தரர், அவனோடு தொடர்பு கொண்ட அல்லது அவன் காலத்து வாழ்ந்த வியத்தகு அடியாரான பூசலாரை விதந்து பாடாமைக்குக் காரணம் என்ன? மேலும், இராசசிங்கன் கட்டிய கயிலாசநாதர் கோவிற்கு எதிரில் மிக அண்மையில் இருப்பது அநேகதங்காவதம் என்ற சிவன் கோவில். சுந்தரர் அதனைப் பாடியுள்ளார்; ஆயின், அதற்கடுத்துள்ள கயிலாசநாதர் கோவிலைப் பாடியதாகத் தெரியவில்லை. சுந்தரர் இராசசிங்கனைக் கழற்சிங்கன் என்று பாராட்டியிருப்பாராயின், அவன் கட்டிய வியத்தகு கோவிலைப் பாடாமல் இருந்திருப்பாரோ? இது நன்கு கவனிக்கத்தக்க செய்தியாகும். - முடிவுரை இங்ங்னம் பலவகையாக ஆராய்ந்து காணின், (1) சுந்தரரும் சேக்கிழாரும் கழற்சிங்கனைப்பற்றிக் கூறிய குறிப்புக்கள் அனைத்திற்கும் நந்திவர்மனைப்பற்றிய குறிப்புக்களே பொருத்தமாகக் காணப்படுகின்றன. (2) மலையாளக் கூற்றுக் குறிக்கும் காலமும் கி.பி. (825) தொண்டைமான் யானைபற்றிய செய்தி நிகழ்ந்த காலமும் ஏறத்தாழ நந்திவர்மன் காலத்திற்கு ஒத்துவருகின்றன. (3) சுந்தரர் இராசசிங்கன் காலத்தவராகக்கொள்ளற்கு அப்பர்க்கும் இராசசிங்கனுக்கும் உள்ள குறுகிய கால இடையீடும் சுந்தரர் கயிலாசநாதர் கோவிலைப் பாடாமையும் தடைகளாகக் கருதப்படலாம். இவையனைத்தையும் நோக்க, இராச சிங்கனே கழற்சிங்கன் என்ற முடிவுக்குரிய தக்க சான்றுகள் கிடைக்கும் வரை, சுந்தரர் குறித்த கழற்சிங்கன் மூன்றாம் நந்திவர்மனே எனக் கொள்ளலாம். குறிப்புகள் 1. T.V.S. Pandarathar, Tamil Polil, Vol.3, pp.205-209. K. Somasundaram, Ibid, Vol.8, pp.414–418; M. Raghava Iyengar's ‘Alwargal Kalanilai” pp. 135-136. . Rao Bahdur C.M. Ramachandra Chettiar, Sentamil Selvi, Vol.9, pp. 201-205; Dr.C. Minakshi, ‘Administration and Social Life under the Pallavas', pp.299-304. 3. Dr.N.V. Ramanayya's article on ‘Mahendravarman & Pulikesin II’. 4. Same Scholar's article on Durvinita & Vikramāditya I (Triveni). 5. Dr. C. Minakshi's Administration and Social Life under the Pallavas', p.117. 5a. R. Gopalan's Pallavas of Kanchi' p.109. 6. Dr. N.V. Ramanayya's article on ‘The Date of Pallava Malla’, (J.O.R.). 7. Dr. C. Minakshi's 'Ad, & S. life under the Pallava's, p.300. 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/119&oldid=793136" இலிருந்து மீள்விக்கப்பட்டது