பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மாணிக்கவாசகர் காலம் பல்வேறு முடிவுகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் மாணிக்கவாசகர் காலம் பற்றி எழுந்த ஆராய்ச்சி முடிவுகள் பலவாகும். திருவாளர் திருமலைக்கொழுந்து பிள்ளை, வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார், பொன்னம்பலப் பிள்ளை ஆகிய மூவரும் மணிவாசகர் காலம் கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டாகலாம் என்று முடிவு கூறினர். மும்மொழிப் புலவராய மறைமலையடிகள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என முடிவு கட்டினார். சங்க காலச் சேரர் வரலாற்றை எழுதிய கே.ஜி. சேவுையர் என்பார் கி.பி. நான்காம் நூற்றாண்டின் இடைப் பகுதி என்று குறித்தனர். திருவாளர் திருச்சிற்றம்பலம் பிள்ளை, சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் என்போர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கும், எழாம் நூற்றாண்டின் தொடக்கத் திற்கும் இடைப் பட்ட பகுதியாகலாம் என்றனர். திருவாளர் வில்லன், போப் என்னும் மேனாட்டு அறிஞர் கி. பி. 7 அல்லது 8ஆம் நூற்றாண்டாகலாம் என்று கூறினார். மணிவாசகர் சங்கரர்க்குப் பிற்பட்டவர் ஆதலால், அவர் காலம் கி. பி. 9ஆம் நூற்றாண்டாதல் வேண்டும் என்று திருவாளர் இன்னெஸ் என்பவர் குறித்துள்ளர். தமிழ் வரலாறு எழுதிய சீநிவாச பிள்ளை, பூரணலிங்கம் பிள்ளை, சீனிவாச ஐயங்கார், அநவரதவிநாயகம் பிள்ளை முதலியோர் கி.பி. 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்றனர். கல்வெட்டறிஞரான கோபிநாத ராயர் கி. பி. 10ஆம் நூற்றாண்டின் இறுதி என்று கூறிப் போந்தார். ஆங்கிலக் கலைக்களஞ்சியத்தில் கி. பி. 13 அல்லது 14ஆம் நூற்றைண்டு என்று டாக்டர் ரோஸ்ட் என்பவர் குறித்துள்ளார். திவான்பகதூர் கே. எஸ் இராமசாமி சாஸ்திரிகள் கி. பி. 4 அல்லது 5ஆம் நூற்றாண்டு என்று கூறியுள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/121&oldid=793143" இலிருந்து மீள்விக்கப்பட்டது