பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றின் காலம் 7 பேராசிரியர் மு. இராகவையங்கார் அவர்கள் "அருச் சுனனும் பாண்டிய மரபும்" என்னும் ஆராய்ச்சிமிக்க கட்டுரையில், வியாசபாரதம், மெகஸ்தனிஸ் வரைந்த இண்டிகா இவற்றைக் கொண்டு பாண்டவர்க்கும் பாண்டியர்க்கும் இருந்த நட்புறவை மெய்ப்பித்து, "தென்னாட்டுப் பாரதப் பிரதிகளில் கண்ட செய்திகள் இடைச் செருகல் என்று சிலராற் கூறப்படுவது எவ்வாற்றானும் பொருந்தாதென்பது கண்டுகொள்க’ என்றும் கூறியுள்ளனர். மேலும் அப்பெரியார், தருமபுத்திரனைக் கோதமனார் பாடினார் எனவரும் செய்யுளைப்பற்றிப் பேசுகையில், "இச் செய்தியை மேற்குறித்த விஷயங்களோடு சேர்த்து நோக்கும்போது, அசுவமேதயாகம் போன்ற சந்தர்ப்பம் ஒன்றில், தமிழரசருடன் சென்ற தமிழ்ப்புலவர் ஒருவர் பாண்டவரின் முன்தோன்றலையே அவ்வாறு பாடினரோ என்று சங்கிக்க இடம் தருகின்றது. அப்புறப்பாட்டில் அறவோன் மகனே எனத் தருமபுத்திரர் அக்கோதமரால் அழைக்கப்படுதலும், தலைச்சங்கத்தவர்களிலே கோதமனார் என்றபெயருடைய புலவர் ஒருவர் காணப்படுதலும் இங்கு அறியத்தக்கன' என்று எழுதியிருத்தல் கவனிக்கத் தக்கது. வான்மீகியார் (கி. மு. 600) பாரத நிகழ்ச்சிகட்குப் பிற்பட்டது இராமகாதை என்பது அறிஞர் கருத்து." இராமகாதையை வடமொழியில் பாடியவர் வான்மீகியார் என்பவர். புறநானூற்றில் 358 ஆம் பாடலைப் பாடியவர் வான்மீகியார் என்ற புலவர். அவர் இப்பாட்டில் துறவறத்தின் சிறப்பினைப் புகன்றுள்ளார். இராமகாதை செய்த வான்மீகியாரும் இப்பாடலைப்பாடிய வான்மீகியாரும் ஒருவராகலாம் என்று செந்தமிழ் இதழ் ஆசிரியராகிய பெரும்புலவர் திரு நாராயணய்யங்கார் ஏறத்தாழ எண்பது பக்கங்களில் விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளார்" இம்முடிவு கொள்ளற்பாலதாயின், புறப்பாட்டிற் கண்ட வான்மீகியார் காலம் ஏறக்குறையக் கி. மு. 600 (3TGğTG_}ff { {}. நெடியோன் (கி.மு. 350 - 300) எங்கோ வாழிய குடுமி, தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் ப்ஃறுளி' மணலினும் பலவே எனவரும் புறநானூற்று (9) ஆடிகளிற் குறிக்கப்பெறும் நெடியோனைப் பற்றிச் சிலப்பதிகாரம்", முல்லைக்கலி (4), மதுரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/15&oldid=793212" இலிருந்து மீள்விக்கப்பட்டது