பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் காலம் j41 2. சேக்கிழார் - முதற் குலோத்துங்கன் (கி.பி. 1070-1120) காலத்தவர்." 3. சேக்கிழார் - இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி. 1113-1150) காலத்தவர். 4. சேக்கிழார் - மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178-12.18) காலத்தவர். இவற்றுள் முன் இரண்டு முடிபுகளும் பொருந்துவன அல்லவென்று முன்பே அறிஞர் விளக்கிவிட்டனர்.” ஆதலின், அவைபற்றி நாம் பேசவேண்டுவதில்லை. சேக்கிழார் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தவர் என்பார் கூற்றுப் புதியது. ஆதலின், அவர் கூறும் காரணங்களை ஆராய்ந்து முடிவு காணல் நமது கடமையாகும். அவர் கூறும் காரணங்களாவன: 1. "இரண்டாம் குலோத்துங்கனை உலாவிற் பாடிய அவனது ஆசிரியரான ஒட்டக்கூத்தர், அவ்வுலாவில் (வரிகள் 75-116) அவன் பேரம்பலம் பொன்வேய்ந்ததைக் குறிக்கவில்லை. ஆதலின், அவன் பேரம்பலம் போன்வேய்ந்தவன் ஆகான். 2. "இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சேக்கிழார் பெரிய புராணம் பாடியிருப்பின், ஒட்டக்கூத்தர் அதனை உலாவிற் கூறாதிரார். 3. "இரண்டாம் குலோத்துங்கற்கு ஆசிரியர் ஒட்டக்கூத்தர். அவர் சிறந்த சிவபக்தர். அரசன் அவரைக் கொண்டு பெரிய புராணம் பாடச் செய்யாது, சேக்கிழாரைக் கொண்டு பாடச் செய்தான் என்பது பொருத்தமற்றது. 4. "திருப்புறம்பியத்துக் கல்வெட்டுக்களில் பேரம்பலம் பொன்வேய்ந்த சோழன் என்பதைக் குறிப்பிடும் கல்வெட்டுக்கு மேல் உள்ள கல்வெட்டு மூன்றாம் இராசராசனுடையது எனக் கல்வெட்டாளர் கொண்டனர். இரண்டாங் குலோத்துங்கற்கு மூன்று தலைமுறைக்குப் பிந்தியவன் மூன்றாம் இராசராசன். எனவே, மூன்றாம் தலைமுறைக்குப் பிந்தியவன் கல்வெட்டு மேலும், முந்தியவன் கல்வெட்டுக்கீழும் அமையுமாறு எங்ங்னம்? முந்தியவனது மேலும், பிந்தியவனது கீழும் அமைவதன்றோ இயலும் ஆகவே, கல்வெட்டுத் துறையாளர் கொண்ட கருத்துத் தவறுடையதாகும். உண்மை யாதெனில், மேற்கூறிய கல்வெட்டுக்களிற் கண்ட இராசராசன், இரண்டாம் இராசராசனே, குலோத்துங்கன் மூன்றாம் குலோத்துங்கனே. இவ்வாறு கொள்ளின், யாம் மேலே கிளப்பிய ஐயத்திற்கு இடமிராது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/150&oldid=793214" இலிருந்து மீள்விக்கப்பட்டது