பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் காலம் #59 ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு எம்பிநின் தம்பிநீ தோழன் மங்கை கொழுந்தி எனச்சொன்ன ஆழி நண்பினை உன்னி மயங்குவாள். (சுந்தர., காட்சி. 29) என்னும் பாடலில் அமைந்திருத்தலைக் காணலாம். "இச்செய்தி முதல் நூலாகிய வான்மீகத்தில் இல்லை. இதனால் கம்பன் திருமங்கையாழ்வார் பாசுரத்திலிருந்தே இக்கருத்தை எடுத்திருக்கிறான் என்பது விளக்கமாகிறது. இங்ங்னமே கூனியின் முதுகில் உண்டை தெறித்த கதை வான்மீகத்தில் இல்லை”. இச்செய்தி, - கூனிகூன் உண்டை கொண்டரங்க வோட்டி (800) உளமகிழ்ந்த நாதன் எனத் திருமழிசையாழ்வார் பாசுரத்திலும், கூனே சிதைய உண்டைவில் நிறத்தில் தெரித்தாய் என நம்மாழ்வார் பாசுரத்திலும் வந்துள்ளது. கம்பன் இதனை, பண்டைநாள் இராகவன் பாணி வில்லுமிழ் உண்டையுண் டதனைத்தன் உள்ளத்து உள்ளுவான் - (மந்தரை சூழ்ச்சி., 41) எனத் தன் நூலில் குறிப்பிடுகிறான். எனவே, ஆழ்வார்களுக்குக் கம்பன் பிற்பட்டவன் என்பது மலையிலக்கு. இங்ங்னமே சீவக சிந்தாமணி, சூளாமணி முதலிய காவியங்களுக்கும் கம்பனது காவியம் கடப்பட்டுள்ளது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. இக்காவியங்களும் 10 ஆம் நூற்றாண்டளவில் தோன்றியவையே. பண்டை நூல்களிலிருந்து கம்பன் ஒவ்வோர் அகப்பை அள்ளித் தனது நூலில் அமைத்துக்கொண்டான் என்ற பரம்பரைச் செய்தியும் இவற்றால் வலியுறுகிறது. இந்த அகச் சான்றுகளுக்கு முற்றும் மாறாக, எண்ணிய சகாப்தம்' என்ற செய்யுள் கம்பனை ஆழ்வார்களுக்கு முற்பட்டவனாக்குகிறது. இது முற்றும் அபத்தமாகும். வைணவ சமய வரலாறும் இதற்கு மாறாக உள்ளது. மேலும், சகாப்தம் தமிழ் நாட்டிலே எட்டாம் நூற்றாண்டளவிலே தான் வழங்கத் தொடங்கியது எனச் சாசன வாயிலாக அறிகிறோம். இவ்வாறு வழங்கத் தொடங்கிச் சில நூற்றாண்டுகள் சென்ற பின்னரே அது பொதுமக்களால் வழங்கப்பட்டு, காவியங்களில் குறிக்கப்பட்டிருத்தல் கூடும். இங்ங்னம் கொள்வது பெரும்பாலும் உண்மை ஆதல் சாலும். எனவே, சகாப்த வழக்கு கி.பி. 885-இல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/168&oldid=793254" இலிருந்து மீள்விக்கப்பட்டது