பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் காலம் #65 ஒருவன் காலத்திற்றான். இராமாநுசர் சோழ நாட்டை விட்டு ஹொய்சள நாட்டிற்கு ஓடும் துன்ப நிலைமை உண்டானது. மற்றொருவன் சேக்கிழார் காலத்தவனான இரண்டாம் குலோத்துங்கன். இவன் தில்லைக் கோவிந்தராசரைப் பெயர்த்து அப்புறப்படுத்திவிட்டான். இரண்டாம் இராசராசன் 14ஆம் ஆட்சி ஆண்டில் திருக்கடவூர்க் கோவில் அதிகாரிகள், "இக்கோவிலைக் கண்காணிக்கும் மாகேசுவரர்கள் வைணவரோடு தாராளமாகக் கலந்து பழகினால், அவர்தம் சொத்துக்கள் கோவிலுக்குப் பறிமுதல் செய்யப்படும்", எனத் தீர்மானித்தனர் என்று அக்கோவில் கல்வெட்டு உணர்த்துகின்றது. கம்பன் காலத்தில் சோழப் பேரரசனாக இருந்த மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியில் குகைகள் எனப்பட்ட ஒருவகை மடங்கள் இருந்தன. அவை திருமுறைகளில் வல்ல சைவத் துறவிகளைத் தலைவர்களாகப் பெற்றவை. திருமுறைகளைப் பாதுகாப்பதும் பிறர்க்குக் கற்பிப்பதும் சிவனடியார்களை உண்பிப்பதும் அக்குகைகளின் திருப்பணிகளாக இருந்தன. எவர் தூண்டுதலாலோ சோழ நாட்டில் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியில் குகையிடி கலகம் ஏற்பட்டது. சைவத்தின்மீதோ அல்லது குகை அதிகாரிகள் மீதோ வெறுப்புக்கொண்ட சைவரல்லாதார் இக்கலகத்தில் ஈடுபட்டனராதல் வேண்டும். இதுகாறும் கூறப்பெற்ற சான்றுகளால், கம்பரது காலம் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலம் என்பதை உறுதியாகக் கூறலாம். குறிப்புகள் 1. எண்ணிய சகாத்தம் எண்ணுற் றேழின்மேல் சடையன்வாழ்வு நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன் பண்ணிய இராம காதை பங்குனி அத்த நாளில் கண்ணிய அரங்கர் முன்னே கவியரங் கேற்றி னானே. 2. எஸ். வையாபுரிப் பிள்ளை, கம்பன் காவியம், பக்.80-86. 3. எஸ். வையாபுரிப் பிள்ளை, கம்பன் காவியம், பக்.3-5. 4. டாக்டர் மா. இராசமாணிக்கனார், கம்பன் யார்? பக். 14, 28-36,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/174&oldid=793269" இலிருந்து மீள்விக்கப்பட்டது