பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கால ஆராய்ச்சி பொறுப்பாளியாகார். இந்த உண்மையை நினைவிற் கொண்டு கீழ்வரும் செய்திகளைக் காண்போம்: (1) சகர மெய், அ ஐ ஒள என்னும் மூன்று உயிரோடும் கூடி மொழிக்கு முதலில் வராது என்பது தொல்காப்பிய விதி. சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அஐ ஒளவெனும் மூன்றலங் கடையே, இவ்விதிக்கு மாறாகப் புறநானூற்றில், சடை', ‘சகடம் என்னும் சொற்கள் வந்துள்ளன. பத்துப்பாட்டில் 'சவட்டி', 'சலம், சந்து என்பவை இடம் பெற்றுள்ளன; பதிற்றுப்பத்தில், சவட்டும் என்பது வந்துள்ளது: திருக்குறளில், சமம், சமன் என்பன வந்துள்ளன." - & சமம், (2) ஞகர மெய் ஆ, எ, ஒ என்னும் மூன்று உயிரோடு மட்டுமே கூடி மொழிக்கு முதலில் வரும் என்பது தொல்காப்பிய விதி. ஆ எ ஒ எனும் மூவுயிர் ஞகாரத் துரிய" இவ்விதிக்கு மாறாகப் புறநானூற்றில், ளுமன், ஞமலி', 'Dமிறு என ஞகர மெய் அகர இகரத்துடன் கூடி முதலில் வந்துள்ளது: அகநானூற்றில் Dமிறு ஞமலி என்பன இடம் பெற்றுள்ளன: பதிற்றுப்பத்தில், ஞரல என்பது வந்துள்ளது.' பட்டினப்பாலையில், 'ஞமலி என்பது காணப்படுகின்றது. (3) யகர மெய் ஆ என்னும் உயிரோடு மட்டும் மொழிக்கு முதலில் வரும். ஏனைய பதினோரு உயிர்களோடும் மொழிக்கு முதலில் 575 என்பது தொல்காப்பிய விதி. ஆவோ டல்லது யகர முதலாது இவ்விதிக்கு மாறாக யவனர் என்னும் சொல் சங்க இலக்கியங்களில் வழக்குப் பெற்றுள்ளது. 13 (4) தொல்காப்பியத்தில் கூறப்பட்டுப் பிற்காலத்தில் வழக்கொழிந்த சொற்கள் சில. அவை சுட்டு முதலாகிய இகர இறுதியும் என்று தொடங்கும் நூற்பாவில்" குறிக்கப்பட்ட "அதோளி (அவ்விடம்) இதோளி, உதோளி, எதோளி என்னும் சொற்கள். அவை, இன்றுள்ள சங்க நூற்பாடல்களில் இடம் பெற்றில என்பது கவனிக்கத் தக்கது. (5) நான்கு என்னும் எண்ணுப் பெயர் பிற சொற்களோடு சேரும்போது எவ்வாறு புணரும், எவ்வெவ்வாறு திரியும் என்பன பல நூற்பாக்களில் கூறப்பட்டுள்ளன." ஆயின், அகநானூற்றில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/26&oldid=793290" இலிருந்து மீள்விக்கப்பட்டது