பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கால ஆராய்ச்சி சந்திரகுப்தன் (கி.மு. 325-301 காலத்துச் சமண சமய குரவரான பத்திரபாகு முனிவரின் மாணவரான விசாக முனிவர் தமிழ் நாட்டில் சமண சமயப் பிரசாரம் செய்தார் என்பது சமண நூல் செய்தி. மதுரை மாவட்டத்திற் காணப்படும் பிராமிக் கல்வெட்டுக்கள் சமணரால் வெட்டப் பெற்றவை அவற்றின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்பது கல்வெட்டறிஞர் கருத்து. எனவே, சமணம் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் நுழைந்து பரவத் தொடங்கியதென்னலாம்." சமணம் பற்றிய குறிப்புக்கள் தொல் காப்பியத்தில் இல்லை." அசோகன் தனது இரண்டாம் பாறைக் கல்வெட்டில் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் மனிதர்க்கும், விலங்குகட்கும் மருத்துவ வசதி செய்ததாகக் கூறியிள்ளான்; 13ஆம் பாறைக் கல்வெட்டில், தமிழகத்தில் பெளத்த தருமம் பரவ ஏற்பாடு செய்தமையைக் குறிப்பிட்டுள்ளான். இவற்றால் அசோகன் காலத்திற்றான் (கி.மு. 273 - 232) முதன் முதலாகத் தமிழகத்தில் பெளத்த சமயம் நுழைந்து பரவத் தொடங்கியது என்னும் உண்மை வெளியாகிறது. தமிழகத்தில் கழுகுமலை முதலிய இடங்களிற் காணப்படும் பெளத்தருடைய பிராமிக் கல்வெட்டுகள் கி.மு. 3 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவை என்பது ஆராய்ச்சி அறிஞர் முடிவாகும். பெளத்தம் பற்றிய குறிப்புத் தொல்காப்பியத்திற் சிறிதும் இல்லை. ’ எனவே, தொல்காப்பியம் தமிழகத்தில் பெளத்தம் நுழைவதற்கு முன்பு செய்யப்பட்டதென்னலாம். பனம்பாரனார் ப்ாயிரம், ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்று கூறுகிறது. ஐந்திரம் என்பது வடமொழியில் சிறந்த விளங்கும் பாணினியம் என்னும் இலக்கணத்திற்கு முற்பட்டது என்பது வடநூற் புலவர் கருத்து. தொல்காப்பியர் அப் பழைய வடமொழி இலக்கணத்தை நன்கு படித்தவர் என்று பனம்பாரனார் தம் பாயிரத்தில் பாராட்டியுள்ளார். பாணினியம் வந்த பிறகு ஐந்திரம் மறைந்துவிட்டது. தொல்காப்பியர் பாணினிக்குப் பின்பு வந்தவராயின், அந்நூலையே கற்றுச் சிறப்படைந்திருப்பார்; 'பாணினியம் நிறைந்த தொல்காப்பியன் என்றும் பெயர் பெற்றிருப்பார். அவர் அங்ங்ணம் குறிக்கப்பெறாமையால், பாணினி காலத்திற்கு முற்பட்டவர் என்னலாம்; 52 அல்லது பாணினியம் வட நாட்டில் தோன்றிய பொழுது அதனை அறியாது அதே காலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/34&oldid=793308" இலிருந்து மீள்விக்கப்பட்டது