பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் காலம் 45 2. தொல்காப்பியர், எழுத்தெனப் படுப அகரமுதல னகர இறுவாய் என்று தமது நூலைத் தொடங்கினார். திருவள்ளுவர் 'அகர முதல எழுத்தெல்லாம் என்று தொடங்கி, "கூடி முயங்கப் பெறின்” என்று னகர ஒற்றோடு திருக்குறளை முடித்தார். 3. தொல்காப்பியர், அருள்முந் துறுத்த அன்புபொழி கிளவி பொருள்பட மொழிதல் கிழவோட் குரித்தே بين بمة “. . என்று நூற்பா ஒன்று செய்தார். திருவள்ளுவர் இந்நூற்பாவின் முதலடிப் பொருளை அருளென்னும் அன்பின் குழவி என ஒரு குறளிற் குறித்திருத்தல் கவனிக்கத்தகும். 1. தொல்காப்பியர், நிறைமொழி மாந்தர் ஆணையிற் ದಿಲ್ಡ್ರಕಿಹ மறைமொழி தானே மந்திரம் என்ப" என்று செய்யுளியலில் கூறியுள்ளார். திருவள்ளுவர், நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். எனப் பாடியுள்ளார். - - இத்தகைய ஒருமைப்பாடுகளைக் கண்டே நாவலர் டாக்டர் சோமசுந்தர பாரதியார் அவர்கள், திருக்குறள் தொல்காப்பியத்தை அடுத்துச் செய்யப்பட்டதாதல் வேண்டும் என்று கூறியுள்ளார். 6. சிறந்த கடல் வாணிகத்தில் ஈடுபட்ட ஏலேல சிங்கர் என்பவர் திருவள்ளுவர் நண்பர் என்று செவிவழிச் செய்தி கூறுகிறது. அந்த ஏலேலசிங்கர் இலங்கையை வென்று அரசாண்ட தமிழனான ஏழாரனாக இருக்கலாம் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். அஃது உண்மையாயின், திருவள்ளுவர் காலம் ஏழாரன் காலமானகி.மு. இரண்டாம் நூற்றாண்டாக இருத்தல் கூடும்." இவை அனைத்தையும் நோக்க, திருவள்ளுவர் இன்ன நூற்றாண்டினர் என்று உறுதியாகக் கூறத்தக்க சான்றுகள் கிடைக்கும்வரை, அவர் தொல்காப்பியரை அடுத்துக் கிறிஸ்துப் பெருமானுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் என்று கூறுதலே பொருத்தம் என்பது தெரிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/52&oldid=793350" இலிருந்து மீள்விக்கப்பட்டது