பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கால ஆராய்ச்சி (2) பன்னிரு பாட்டியல் கி. பி. 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டது என்பது முன்பு கூறப்பட்தன்றே? அதிலும் புலவராற்றுப்படை இலக்கணம் கூறப்பட்டுள்ளது. இருங்கண்வானத் திமையோருழைப் பெரும்புலவனை ஆற்றுப்படுத்தன்று (பாடாண்படலம் 42) (3) கி. பி. 17 ஆம் நூற்றாண்டிற் செய்யப்பட்ட இலக்கண விளக்கம் என்னும் நூலிலும் இது கூறப்பட்டுள்ளது." விரும்பிய தரூஉம் விண்ணவர் தம்முழை - அரும்பெறற் புலவரை ஆற்றுப் படுத்தலும் நூற்பா 245' திருமுருகாற்றுப்படை பக்தி நூல். முருகன் அருளைப் பெற்ற புலவர் ஒருவர், பத்தி மிகுந்த மற்றொரு புலவரை அம்முருகன்பால் ஆற்றுப்படுத்துதல் முருகாற்றுப்படையின் பொருளாகும். பிற ஆற்றுப்படைகள் ஆற்றுப்படுத்தப்படுபவர்களது பெயரோடு சார்த்தி வழங்கப்படும்; ஆனால், திருமுருகாற்றுப்படை பாட்டுடைத் தலைவன் பெயரோடு சார்ந்து வழங்கும். பிறவற்றில் காணப்படுவனவாகிய ஆற்றுப்படுத்துவானை விளித்தலும், தனது நிலையை விளக்கலும், ஆற்றுப்படுத்துவான் தனது பழைய நிலை, பரிசில் பெற்ற முறை என்பவற்றைக் கூறுதலும் இதில் விளக்கப்படாமல் உய்த்துணர வைக்கப்பட்டிருக்கின்றன.” 3 பத்துப்பாட்டைப் பதிப்பித்த டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களுக்குக் கிடைத்த பெரும்பான்மையான ஏடுகளுள் திருமுருகாற்றுப்படை சேர்க்கப்பட்டிருக்கவில்லை." மேலும், நெடுநல்வாடை பாடிய நக்கீரர் பேரரசர்களையும், சிற்றரசர்களையும் பாடியவர்; திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரர், கடவுள் பத்தியிற் சிறந்து விளங்கியவர். இவர் பாடிய திருமுருகாற்றுப்படை 11 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டிருப்பதும் இவர் பிற்காலத்தினர் என்பதையே ஆதரிக்கின்றது. இதன் ஆசிரியரை நக்கீரதேவ நாயனார் என்று 11 ஆம் திருமுறை கூறுகின்றது." இனி இப் பாடற் செய்தியைக் கொண்டு இதன் காலத்தை இங்கு ஆராய்வோம். பரிபாடலில் முருகன் பிறப்பு சிவபெருமான் உமையம்மையுடன் நெடுங்காலம் தொடர்ந்து இன்புற்றிருந்தமையால், இந்திரன் சென்று இறைவனிடம் ஒரு வரம் தருமாறு வேண்டினான். இறைவன் இசைவு தந்தவுடன், உமையைக் கூடாதிருக்கும்படி சிவனை வேண்டினான்; அசுரரை அழிக்கத்தகும் சிவசக்தி பொருந்திய பிள்ளையை அருளும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/61&oldid=793371" இலிருந்து மீள்விக்கப்பட்டது