பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் திருமுடியிற் கொண்டோன், செய்யவனாகிய முருகவேளை முற்காலத்தே தந்தருளிய தாதையுமானவள், உலகுக்கெல்லாம் ஒரு நாயகன், சுந்தரமூர்த்திகளுக்காகத் தூதும் நடந்த பெருமான். போரிடத்தே அன்று பகையானோரின் முப்புர கோட்டைகளுக்கும் அவன் இடுவித்த தீயைப்போன்ற கொடுமையுடனே, அதோ சந்திரனும் செவ்வொளி பரப்பிக் கீழ்வ்ானத்தே எழுந்ததே? இனிச்செய்வதுதான் என்னே? திருமால் - பெருமை பொருந்திய தாரையின் கணவனான வாலியையும், ஓங்கி உயர்ந்த மராமரத்தையும், எழுகடலையும், பகைவரையும், வன்னியென்னும் அரக்கனையும் முன்னாளிலே கொன்று அழித்தவன் திருமால். சிறந்த மன்மதனை முன்னாளிலே பெற்றுத் தந்த தகப்பனும் அவனேயாவான். உலகுக்கு நாயகனாம் அழகான இராமனும் அவனே அவன் தூதனாகிய ஆஞ்சனேயன் அந் நாளிலே பகைவரூரான இலங்கையிலே இட்ட தீயைப் போன்றதான கொடுமையுடனே சந்திரனும் இப்போது எழுந்ததே? இனி யான் யாது செய்வேன்? காதலனைப் பிரிந்திருந்து வாடும் ஒரு தலைமகள் சந்திரனின் உதயத்தினாலே மனங்கலங்கி இங்ங்னம் கூறி வாட்டமடைவதாகக் கொள்ளுக. சந்திரனால் அவள் அடைந்த வேதனையின் மிகுதி இப்படிக் கூறப்படுகிறது. நடேசனின் உடைமை தில்லை நடராசப்பெருமானின் உடைமைகள் என்னென் னவோ? அவர் உமையை மணந்து எப்படித்தான் குடித்தனம் நடத்துகிறாரோ? கவிஞர் விளங்கத் தருகிறார். ஏறு கட்டிய கொட்டி லரங்கமே யீரி ரண்டு முகன்வாயி லாயமே மாறுகண் ணப்பன் வாய்மடைப் பள்ளியே வாய்த்த வோடை திருமால்வ தனமே வீறு சேர் சிறுத் தொண்டனில் லாளுந்தி வேட்ட நற்கறி காய்க்கின்ற தோட்டமே நாறு பூம்பொழில் சூழ்தில்லை யம்பல நாரி பகற்கு நாடக சாலையே! (100) ஒரு பாகத்தே பெண்ணினைக் கொண்டவனாகிய பெருமானுக்கு வாகனமாகிய காளை கட்டியிருக்கும் கொட்டில் திருவரங்கமேயாகும்; வேதமோதும் நான்முகனின் வாயே குதிரை லாயமாகும்; வேடனாகவிருந்து பக்தனாக மாறிய கண்ணப்பனின் திருவாயே மடைப்பள்ளியாகும்; தாமரைப் பூப் பொருந்திய ஒடையானது திருமாலின் திருமுகமேயாகும்; சிறப்புப்பொருந்திய சிறுத் தொண்டரின் மனைவியினுடைய திருவயிறே விரும்பிய