பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தங்கச் சங்கிலி இன்னிசை குழைகின்றபோது தேன் கலந்த பால் போல வெண்ணிலவு சுவையேறிவிடும். அதன் இன்ப மயக்கத்திலே வெண்மணல் திடர்களும், தண்புனற். பரப்பும்/ வெண்பச்சைப் புகை படிந்ததுபோலத் தோன்றும் நாணற் புதர்களும், கரும் பச்சைப் பெரு, மரங்களும் கட்டுண்டு அசைவற்றுக் கிடந்தன. நானும் அந்த நிலையிலேதான் மணல்மீது படுத்தேன். குயில்களிலே ஆணுக்குத்தான் அற்புதமான குர லெடுத்துப் பாடும் திறன் உண்டு. பெண் குயில் குகு-குகு-குகுவென்று குதப்பும். ஆண் குயிலினுடைய பாட்டின் வன்மைக்கு ஏற்றவாறு அதற்குக் காதலி கள் கிடைப்பார்கள் என்று கூறுவர். இப்பொழுது காதலுணர்ச்சி பொங்கப்பாடும் ஆணின் குரலில் ஒரு குயிற்பேடை சொக்கிப் போய் தன் மறைவிடத்தைக் குதலை மொழிகளால் வெளிப்படுத்திவிட்டது. அதை அறிந்த ஆண் குயிலின் உற்சாகத்தை என்னென்று சொல்வது! மேலும் மேலும் அது உச்ச ஸ்தாயியிலே பாடத் தொடங்கிற்று. - குயிலனும் குயிலியும் கிளை கிளையாகத் தான் ஒன்றை ஒன்று நெருங்க, நெருங்க அவற்றின் காதல் க்ரை கடந்து அந்தப் பிரதேசத்தையே, வெண்ணில் வில் கரைந்த மதன லோகமாக்கியது. 1.கலந்தவர்க் கினியூதோர் கள்ளுமாய், பிரிந்தவர்க்குயிர்சூடு விடழு மாய்” என்ற கம்பனுடைய கவிதை வரிகள் திே ஆ.ரென்று என் மனத்திலே மலர்ந்தன. r மலர்ந்த கவிதையிலும், மலர்ந்த நெடு நிலவி லும், அதன் மயக்கிலும் கட்டுண்டு அசைவற்றுத் கிடந்த மணற் பரப்பிலும், காவிரிப் பெண்ண்ணங் கின் எழிலிலும் லயித்துப் போய் நான் மெய் மறத் திருந்தேன். o எவ்வளவு நேரம் அவ்வாறு இருந்தேனே தெரி யாது. தண்ணீருக்குள்ளே யாரோ வேகமாக: (3)