பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தங்கச் சங்கிலி வெறுப்பிலே நான் சதா நிலைபெற்று நின்றிருந்தேன். அந்த வெறுப்பென்னும் கோட்டைக்குள்ளே ஆசைப் ப்ேய் குடியிருக்கவில்லையா ? அதை வெளியில் விட். மல் தடுப்பதற்குத்தானே அவ்வளவு பெரிய கோ: டையை உண்டாக்கினர்கள் ?” - "ஐயோ! நான் அறிவிழந்தேன்?’ என்று அவன் விம்மி அழுதான். தலையிலே இரு கைகளாலும் புடைத்துக்கொண்டான். மறுகணத்திலே, நீயல் லவா என்னை நிலைகுலையச் செய்தவள்? உன்னையும் இதோ கொன்ருெழிக்கிறேன் பார் ” என்று வெறி பிடித்தவன்போல் அவன் குகையினுள்ளே கதறி எழுந்தான். அந்த மங்கை அவன் கைக்குள் அகப்படாமல் சிரித்துக்கொண்டே குகையினின்றும் வெளியே வந்தாள். என்னைக் கொல்லுவதால் உங்களுக்கு வெற்றி கிடையாது ; முதலில் அந்தப் பேயை வேறு வழியிலே தப்பியோடும்படி செய்யுங்கள் ” என்று அவள் ஆலோசனை கூறினுள். - "அதைக் கொல்வதற்குத்தானே நான் என் உடலையே வாட்டுகிறேன் ?’ என்ருன் அவன். •. "உடம்பை வாட்டுவதிலும் வெறுப்பதிலும், அந்த உடம்பைப்பற்றிய ஆசையும் நினைப்பும் இருக் கின்றனவே ; அவற்றையல்லவா. நான் ஒழிக்கச் செர்ல்லுகிறேன் ? வெறுப்பினுள்ளே ஆசை குடி கொண்டிருக்கிறது. அதனுல் அந்த வெறுப்பை விலக்காது ஆசை யொழியாது ' என்று அவள் தெளிந்த குரலிலே மொழிந்தாள். * . அவன் குகையைவிட்டுத் தடுமாறி வெளியே வந்தான். அவன் மூளை கலங்கியது. அறிவு தடுமாறி,