கலைஞரின் சட்டமன்ற உரைகள்
99
முன்பாகவே - அவர்கள் இன்னும் பல தேவைகளையும், நன்மை களையும் கூறியிருக்கிறார்கள் இடையிலேயே கிராமங்களில் உள்ள போலீஸ்காரர்களுக்கு முதல் கட்டமாக இந்த ஆண்டு ஐயாயிரம் பேர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படும். அந்த சைக்கிள்கள் வாங்க மானியமாக 40 சதவிகிதமும் கடனாக 60 சதவிகிதமும் அவர்களுக்கு அளிக்கப்படும்.
காவல்துறையைப்பற்றி மிகுந்த கடமையுணர்வோடும், கண்ணிய உணர்வோடும், கட்டுப்பாட்டு உணர்வோடும் பலரும் கருத்துக்களை எடுத்துச்சொன்னார்கள். நல்ல காரியங்களுக்காகப் பாராட்டுதல்களைத் தெரிவித்தார்கள். அதே நேரத்தில் அவர்களிடத்தில் இருக்கும் சிறு சிறு குறைபாடுகளை அவர்களே நீக்கிக்கொள்ள முன்வரவேண்டும். வேலியே பயிரை மேய்வது என்று இல்லாமல் அவர்கள் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்று இந்த அவையின் சார்பாகக் காவல் துறையினரைக் கேட்டுக்கொண்டு காவல்துறையின் பெரிய அதிகாரிகளும், ஏனைய அதிகாரிகளும் இந்த அரசோடும் என்னோடும் ஒத்துழைத்ததற்காகவும், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும். அமைதி ஒழுங்கை நிலைநாட்டவும் அரசுடன் ஒத்துழைத்த ஐ.ஜி. அவர்களுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்து, இந்தத்துறைச் செயலாளர்களுக்குப் பாராட்டுதல்களைத் தெரிவித்து, இதிலே விரிவான விளக்கம் அளித்துவிட்ட காரணத்தால் இந்த மானியத்தின்மீது கொடுக்கப்பட்ட வெட்டுத் தீர்மானங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டு இந்த அளவோடு அமைகிறேன்.