உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

101

இந்தத் துறையில் ஈடுபட்டு இருக்கிற ஆயிரக்கணக்கான அலுவலர்கள் அவர்களுடைய உயிரையும் பணையமாக வைத்து இந்த நாட்டு மக்களைப் பாதுகாப்பதிலும், சட்டம், ஒழுங்கு, அமைதி இவைகளைப் பேணிக் காப்பாற்றவேண்டுமென்பதற்காக உழைப்பதிலும் அல்லும் பகலும் பணியாற்றி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களுடைய வாழ்வில் நல்ல ஒளி இருக்க வேண்டும், அவர்களுடைய வாழ்வில் நிம்மதி இருக்கவேண்டும் என்று இந்த அரசு கருதிய காரணத்தாலேதான் தமிழ் நாட்டிலே, வெள்ளைக்காரன் காலத்திலிருந்து இதுவரையிலே உருவாக்கப் படாத, காவல் துறை ஆணைக் குழு (போலீஸ் கமிஷன்) முதல் தடவையாக 1969ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, அந்தக் குழு அளித்த பரிந்துரைகளிலே உடனடியாகவும் மிக அவசியமானதும் என்று கருதக்கூடிய கருத்துக்களை நிறைவேற்றுகிற வகையில் அரசு முன்வந்து, அந்தப் பரிந்துரைகளில் பலவற்றை ஏற்று நிறைவேற்றியிருப்பதையும் இங்கே வைக்கப்பட்டுள்ள ஆய்வுரையில் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

மேலும் போலீஸ் கமிஷனின் சிபார்சுகள் பலவற்றைப் படிப்படி யாக நிறைவேற்றுவதற்கு இந்த அரசு உரிய முயற்சிகளை ஏற்ற காலத்திலே எடுக்கும் என்பதையும் நான் இந்த மன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போலீசாருடைய திறமையைக் காப்பாற்றவும் அவர்களுடைய உயிரைத் திரணமென மதித்து ஆற்றுகிற பல்வேறு பணிகளுக்கு, இப்போது நான் தொடக்கத்திலே குறிப்பிட்டது போல், அவர்களுடைய வாழ்வில் அமைதி இருக்கவேண்டுமென்பதற்காக இரண்டாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டபோது போலீஸ் கமிஷனின் பரிந்துரையை அதோடு இணைத்து அவர்களுக்கு என்று நாம் பல்வேறு நன்மைகளைச் செய்து இருக்கிறோம். குறிப்பாக நம்முடைய திரு. பொன்னப்ப நாடார் எடுத்துக் காட்டினார்கள். போலீசாருடைய சம்பளம் ஓரளவு உயர்த்தப் பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்கள். அந்த ஓரளவு என்ன என்பதை நாம் சற்று உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

1965-ம் ஆண்டிலே அவர்களுடைய அடிப்படை சம்பளம் ரூ. 65 ஆகவும் பஞ்சப் படி ரூ. 33 ஆகவும் இருந்து, 1967-ல் அவர்களுடைய அடிப்படைச் சம்பளம் ரூ. 70 ஆகவும், பஞ்சப்படி