கலைஞரின் சட்டமன்ற உரைகள்
105
நிச்சயமாக இந்த வேலை வாய்ப்பில் இடம் பெற மாட்டார்கள் என்பதை உறுதியாகக் கூறுகிறேன். அரசாங்க அதிகாரிகள், அது எந்த அரசாங்கமாக இருந்தாலும், அதற்கு விசுவாசத்தோடு நடந்து கொள்ளவேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. கட்சிக்கு விசுவாசம் காட்டக் கூடாது. அரசாங்கத்தின் காரியங்கள், செயல் முறைகளை நடைமுறைப் படுத்தவேண்டிய பணிகள் இவற்றில் எந்த அதிகாரியாக இருந்தாலும், எந்த துறையில் இருந்தாலும், விசுவாசமாக இருக்க வேண்டும். கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கூறவில்லை.
இங்கே பேசிய பலரும்
உள்ளவர்கள்
--
குறிப்பாக எதிர்த் தரப்பில் எடுத்துச் சொன்னார்கள். அரசியல் தலையீடு இதிலே நிச்சயமாக இருக்கக்கூடாது என்று எடுத்துச் சொன்னார்கள். அரசியல் தலையீடு இன்றையதினம் காவல் துறையில் இருக்கிறதா என்பதை அவர்கள் பேசிய பேச்சிலிருந்தே நாம் நன்றாகப் புரிந்து கொள்ளலாம். அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்று கூறும் அதே நேரத்தில், தாங்கள் தலையிட நேர்ந்தது என்பதையும் கூறிவிட்டு, ஆனால் நான் சென்றது ஒரு அநியாயத்தைக் கண்டிக்க, என்று குறிப்பிட்டார்கள்.
ஆனால்
அதிலும் குறிப்பாக, நம்முடைய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திரு. கே.டி.கே. தங்கமணி சொல்லும்போது, நான்கூட இந்த விஷயத்திலே தலையிட்டேன், ஒரு அநியாயத்தைக் கண்டிக்கத் தலையிட்டேன், என்று சொன்னார்கள். நியாயமா, அநியாயமா என்று ஆராய்ந்தறிவது யார்? தலையீடு தலையீடுதான். தலையிட்ட பிறகு நான் நியாயத்திற்காகத் தலையிட்டேன் என்று சொன்னாலும், அநியாயத்திற்குத் தலையிட்டேன் என்று சொன்னாலும் அது பொருந்திவராது. ஆனால் தலையீடுகளை வைத்து ஏற்பட்ட விளைவுகள் என்ன? இந்தத் தலையீட்டின் காரணமாக ஒரு நியாயமான காரியம் அநியாயமாக மாற்றப்பட்டதா? அல்லது ஒரு அநியாயம் நியாயமாக மாற்றப்பட்டதா? என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அப்படிப்பட்ட அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது என்பதற்காக, காவல் துறைத் தலைமை அதிகாரியின்மூலம், 1968-ல் அனைவருக்கும் ஓர் அறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது 'எல்லா