110
காவல்துறை பற்றி
இவற்றையெல்லாம் நான் இங்கே எடுத்துக்காட்டிப் பேசும் போது, சந்தேக வழக்குகள் போடுவது நியாயம்தான் என்று அவற்றை ஊர்ஜிதப்படுத்துவதற்காகப் பேசுவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இப்படிப் போடும் நேரத்தில், இந்தச் சந்தேக வழக்குகளால் பாதிக்கப்படுகின்ற, ஏதும் அறியாதவர்களுக்கு உதவிகரமாக இருப்பதற்குக் கூடுமான வரையில் - நாம் இதைத் தவிர வேறு சட்டங்கள் ஏதேனும் இயற்ற முடியுமா என்று முடிவெடுக்கும் வரையில் - போடப்படும் இந்தச் சந்தேக வழக்குகள் எல்லாம் துரிதமாகப் பைசல் செய்தாக வேண்டும், அவற்றிற்குத் தீர்வு கண்டாக வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றது.
இப்போது உள்ள வழக்கத்தின்படி, ஒருவர் கைது செய்யப் படுவாரேயானால் அவர், தான் இந்த ஊரைச் சேர்ந்தவர் என்று சொன்னால், அந்த ஊருக்குக் கடிதம் எழுதி, அந்த ஊரிலுள்ள ஸ்டேஷனிலிருந்து அதுபற்றிய தகவல் வருவதற்கு, இடையிலே ஆகும் ஒன்று அல்லது இரண்டு வார காலத்திற்கு, தன்னைப் பற்றி ஏதும் தெரிவித்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில், குற்றமற்றவர் சில நேரங்களில் சிறையில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக, கூடுமானவரையில் தொலைபேசியைப் பயன்படுத்தி, அங்கேயிருந்து தகவலறிந்து, இரண்டொரு நாட்களிலேயே, அவர் நிரபராதி என்றால் விடுவித்தும் அப்படியின்றிக் குற்றவாளியென்றால் வழக்குத் தொடர்ந்தும், நடவடிக்கை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கின்றார்கள். எனவே, இப்படிச் சந்தேகத்தின் பெயரால் கைது செய்வதற்காக, உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக வேறுவிதமான சட்டம் அல்லது நடைமுறையைக் காணும் வரையில் அதுவரையில், இந்த இடைக்காலத்தில், இப்படிக் கைது செய்யப்படும்போது அவற்றில் துரிதமாகத் தீர்வு கண்டிடவேண்டும் என்று எடுத்துச் சொல்லப்பட்டு இருக்கின்றது.
திறமை வாய்ந்த இந்த நிர்வாகம் இன்றைய தினம் தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில், மாண்புமிகு உறுப்பினர்கள் எடுத்துக்காட்டியதுபோல, தீவிரவாதிகள், “நக்சலைட்டுகள்” என்று சொல்லப்படும் அவர்கள் விஷயத்தில், எந்த அளவிற்குக்