கலைஞரின் சட்டமன்ற உரைகள்
119
சேர்க்க இடம் கேட்டேன்; 4000 ரூபாய் அவர்கள் நன்கொடை என்ற பெயரில் லஞ்சம் கேட்கிறார்கள் என்று காவல் துறைக்கு அப்போதே செய்தி அனுப்பியிருப்பாரேயானால், காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுத்திருக்க முடியும். அப்படி நடவடிக்கை எடுக்கின்ற சூழ்நிலையைக் காவல் துறைக்குத் தராமல் இன்றைக்குப் பகிரங்கமாக மேடையில் பேசுவது தமிழ் நாட்டின் ஒரு நாகரீகமான, பண்பாடான மரபை எந்த அளவிற்குப் பாதிக்கிறது. காவல் துறையின் நேர்மையை அது எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று இந்த மாமன்றத்தில் உள்ள உறுப்பினர்களையெல்லாம் கேட்டுக்கொள்ளுகிறேன்.
நான்
திருமதி. த. ந. அனந்தநாயகி : ஏதோ லஞ்சத்தைப் புதிதாகக் கண்டுபிடித்துக் குற்றம் சாட்டவேண்டும் என்று கூறியது போலச் சொல்லுவது சரியில்லை. சென்ற ஆண்டிலே கல்வி அமைச்சர் அவர்களே ஒருவரைப் பிடித்துக் கொடுத்தார். அதே மாதிரிச் சம்பவங்கள் நடந்து வருகின்றன என்பதால்தான் சொன்னார்கள்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : கல்வி அமைச்சருக்குள்ள... பொறுப்புணர்ச்சி நேற்றுப் பேசியவருக்கு இல்லை என்பதைத்தான் சுட்டிக்காட்ட வந்தேன். கல்வி அமைச்சர் அவர்கள் தன்னிடம் லஞ்சம் கொடுக்க வந்தவர் கட்சியைச் சார்ந்தவர் என்று தெரிந்தும்கூட அவரைப் போலீசில் பிடித்துக் கொடுத்தார். ஆனால் இங்கே லஞ்சம் கொடுத்தவர் அந்தக் குற்றத்தைச் செய்து விட்டு நான் லஞ்சம் கொடுத்தேன் என்று மேடையில் பேசுவது கொஞ்சமும் நாகரீகத்திற்கு ஏற்றதல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் நேரத்தில் நடந்த அரசியல் கொலைகளைப்பற்றிச் சொன்னார்கள். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிச் சார்புள்ள வர்கள் பத்துப் பதினேழு பேர்கள் கொல்லப்பட்டார்கள் என்கிற போது, வெவ்வேறு விஷயங்களுக்கு எல்லாம் அரசியல் வண்ணம் பூசப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பத்திரிகையிலே ஒரு காங்கிரஸ்காரர் கொல்லப்பட்டார் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கொன்றார்கள் என்பதாகவும்,