உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

123

உரை : 7

7

நாள் : 15.03.1972

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த மாமன்றத்தின் முன்னால் வைக்கப்பட்ட காவல்துறை மானியத்தின் மீது மாண்புமிகு உறுப்பினர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும், தோழமைக் கட்சியின் தலைவர்களும் எடுத்து உரைத்திருக்கிற பல்வேறு கருத்துக்களின் அடிப்படையில் சில விளக்கங்களை நான் இங்கே கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

காவல்துறை மானியத்தைப்பற்றிப் பேசிய அனைவருமே காவல்துறையில் ஈடுபட்டிருக்கிற பொறுப்புள்ள அதிகாரிகளும், காவலர்களும் எந்த அளவுக்கு இந்தச் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் தொண்டாற்றுகின்றார்கள் என்பதனை விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். கடமை, கண்ணியம் எனக் கொண்டு ஆண்டாண்டு காலமாகப் பணியாற்றி வருகின்ற அந்தத் துறையினர் சமுதாயத்திலும் நாட்டிலும் நல்ல பாதுகாப்பும் தூய்மையும், புனிதத் தன்மையும் ஏற்பட வேண்டுமென்பதற்காகத் தங்களுடைய உயிரைக்கூட பணையமாக வைத்து ஆற்றி வருகிற பணிகளை நாம் அனைவரும் நன்றாக அறிவோம்.

கிட்டத்தட்ட 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறுப்புள்ள காவலர்களும், அதிகாரிகளும் இருக்கின்ற அந்தத் துறையில், இங்கு பேசிய உறுப்பினர்கள் குறிப்பிட்டதைப்போல அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக ஒன்றிரண்டு குறைகள் தென்பட்டாலும் அவைகளை எல்லாம், இன்று காலை முதல் இதுவரை எடுத்துச் சொல்லப்பட்ட பல விளக்கங்களின் மூலம் அவர்களே கூட திருத்திக்கொள்கின்ற சூழ்நிலை நிச்சயமாக உருவாகும் என்று நான் நம்புகிறேன். இந்தப் பெரிய இலாக்கா எப்படிச் சீர்பட வேண்டுமென்ற நல்ல எண்ணத்தோடு பல உறுப்பினர்களும்,