உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

காவல்துறை பற்றி

உலோகத்திலே செய்யப்படுகின்றன. பழைய காலத்து சிலைகள் அப்படியல்ல. அதிலும் நடராசர் சிலையிலுள்ள வளைவுகள், விரல் நெளிவுகள் இவையெல்லாம் செய்திட தங்கம் அதிகமாகக் கலக்கப்படும். அப்படித் தங்கம் கலக்கப்பட்ட சிலைகள் எல்லாம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. குற்றாலத்திலே ஸ்தாபன காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் அந்தத் திலகர் (சிரிப்பு). திலகருடைய சகோதரர், சித்தரஞ்சன் தாஸ் பம்பாயிலிருந்துகொண்டு மூத்த சகோதரருடைய பிரதிநிதியாக இந்த வியாபாரத்தை நடத்தி வந்திருக்கிறார். சிலை வாங்கி விற்பதிலே ஒரு பெரிய தொடர்பே ஏற்படுத்திக்கொண்டு இந்தச் சிலைகள் பல இடங்களுக்கும் போயிருக்கின்றன. ஒரேவொரு சிலை நடராசருடைய சிலை மாத்திரம் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அந்தச் சிலையை அமெரிக்க நாட்டுக்காரன் 75 இலட்சம் ரூபாய் விலை கூறிக்கொண்டிருக்கின்றான்.

இப்படி பயங்கரமான ஒரு சிலை திருட்டு 1952லிருந்து திட்டமிட்டு ஒரு குடும்பமே அதிலே ஈடுபட்டு நடத்தப் பட்டிருக்கிறது. எதற்கெடுத்தாலும் அரசியலைக் கலக்கின்றவர்கள் வைகளையெல்லாம் மறந்து விடக்கூடாது நாங்கள் சொல்லுகின்ற காரணத்தினால், ஏதோ காங்கிரஸ் கட்சியைக் குற்றம் சாட்டுகிறேன் என்று கருதிவிடக்கூடாது.

ஊழல், விவகாரங்கள் இவைகளையெல்லாம் பேசும் நேரத்தில் 1952-லிருந்து 1967 வரையிலேயும் நடைபெற்ற இந்தச் சம்பவங்களை அவர்கள் ஒரு கட்சியின் போர்வையிலே ஒளிந்து கொண்டு நடத்தியிருக்கின்றார்கள். எந்தக் காரியம் எந்தக் கட்சியின் சார்பாக நடைபெற்றாலும் அது கண்டிக்கப் படவேண்டிய ஒன்று. அது கழகத்தின் சார்பிலே நடைபெற்றாலும் சரி, காங்கிரஸ் சார்பிலே நடைபெற்றாலும் சரி, கம்யூனிஸ்ட் சார்பிலே நடைபெற்றிருந்தாலும் சரி, சுதந்திராக் கட்சியின் சார்பிலே நடைபெற்றிருந்தாலும் சரி எந்தக் கட்சியாக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆகவே இப்படிப்பட்ட தகவல்கள் இருக்கும்பொழுது, வேண்டுமென்றே ஒரு ஆளுங்கட்சியைக் குறைகூற வேண்டுமென்பதற்காக மேடைகளையும், ஏடுகளையும் பயன்படுத்திக் கொள்வது நல்லது அல்ல என்பதற்காக இதைச்

சில