144
காவல்துறை பற்றி
எல்லாவற்றையும் மிகுந்த நிதானத்தோடு நாம் அணுக
வேண்டுமென்ற அளவில் எல்லாக் கிளர்ச்சிகளையும்
அணுகுகிறோம். கைது செய்யப்படுகிறார்கள், மறுநாள் விடுதலை செய்யப்படுகிறார்கள். வழக்குகள் திரும்பப் பெறப்படுகின்றன. அந்த அளவுக்கு இந்த அரசு நிதானப் போக்கைக் காட்டி வருகிறது.
ஆனால் நான் ஒன்றைச் சொல்லுவேன். இந்த அரசு தலையிடுகிறது, தலையிடுகிறது என்று சொல்லுகிறார்களே 1951-ம் ஆண்டில் நடைபெற்ற ஒன்று. 1947-ல் இருந்து ஃபைல்களைக் கொண்டு வா, விசாரணைக்குத் தயார்' என்கிறார்கள்.
ஃபைல்கள்
சொல்லுகிறேன்.
வரும் புற்றீசல்கள் போல, ஒன்றைச்
1951-ம் ஆண்டு தேனியில் ஒரு கலவரம் நடந்தது. நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தேனியில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசச் சென்றார்கள். அங்கு ஏற்கனவே ஒரு கூட்டம் நாவலர் பேசுகின்ற அதே இடத்தில் நடத்த வேண்டுமென்று அவர்களும் ஏற்பாடு செய்து 'நீங்கள் நடத்தக்கூடாது' என்று இவர்களிடத்தில் சொல்ல, சமாதானமான முறையில் முதலில் நாவலர் பேசுகின்ற கூட்டத்தை முடித்துவிட்டு பிறகு அவர்கள் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தீர்ப்புக் கூறி, நாவலர் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றார். நடந்தது என்ன? மறைந்த தேனி தியாகராஜன் அவர்கள் அப்போது ஜில்லா போர்டு பிரசிடென்ட். மதுரை மாவட்டத்தின் தலைவர். அவர் உட்பட 142 பேர் அங்கே நுழைந்து நாவலருடைய கூட்டத்தில் பெரும் ரகளையை உண்டாக்கினார்கள். பெரிய பாறாங்கல்லை நாவலர் மீது வீசுகின்ற அளவுக்கு பயங்கரமான சூழ்நிலை எல்லாம் ஏற்பட்டது. அப்படி ஏற்பட்டதையொட்டி நடைபெற்ற சம்பவங்களை நான் இங்கே எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
4-7-1951-ம் தேதி தேனியில் நடந்த கலவரத்தைப் பற்றி அன்றே பெரியகுளம் ஏ.எஸ்.பி. ஒரு தந்தி கொடுத்தார். அதில் அவர் குறிப்பிட்டதாவது.
'ஜில்லா போர்டு தலைவர் தியாகராஜன் தலைமையில் திராவிட கழகத்தாரையும், போலீசாரையும் கலவரக் கூட்டம் ஒன்று