உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

151

வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள் என்றும், அவற்றைக்கொண்டு போய் வைத்ததும், ஏதோ புகைய ஆரம்பித்ததால் ஆற்றில் போட்டு விட்டார்கள் என்றும் அதிகாரிகள் ரிப்போர்ட் கொடுத்திருப்பதாகச் சொன்னார்கள்.

இரண்டு விதமான ரிப்போர்ட்கள் வந்திருக்கின்றன. வழக்கு விசாரணையில் இருப்பதால் ரிப்போர்ட்டை பகிரங்கமாக வைக்க முடியாது. இரண்டு அறிக்கைகளும் வித்தியாசமாக இருக்கின்றன. சொல்லப்படுவது, குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுவதற்காகக் கொண்டு வரப்பட்டது, புகைய ஆரம்பித்ததால் ஆற்றில் போட்டு விட்டார்கள் என்று. ராணுவ வீரர்கள் வீட்டிற்கும் குடமுருட்டி ஆற்றுக்கும் 3, 4 மைல் இருக்கும். ஏதோ குளத்தங்கரையில் இருப்பவர்கள் போலவும்,

புகைய ஆரம்பித்ததும், குளத்தில் போட்டு விட்டது போலவும் பேசுவது சரியல்ல. இரண்டு மைல் கொண்டு வந்து ஏன் ஆற்றில் போடாமல் பாலத்தில் போட்டார்கள்? அது புகை குண்டுதான். வெடிக்கும் குண்டு அல்ல. புகை குண்டானாலும் பாலத்தின் மேல் கார்கள் போகிறபோது அது வெடித்திருந்தால் கார்கள் கவிழ நேரிட்டு இருக்கும். நானல்ல, யார் அந்தப் பாலத்தின் மேல் சென்றிருந்தாலும் அந்த நிலை ஏற்பட்டிருக்கும். நான் அந்த குண்டு வைக்கப்பட்ட பாலத்தின் வழியாகச் செல்வதாக இருந்த காரணத்தால், என்னைக் கொல்வதற்கு குண்டு வைத்து விட்டார்கள் என்று சொல்லி என் மீது தவறாக அன்பு வைத்து இருக்கிற கழக நண்பர்கள், எனக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்று வருத்தத்தோடு, முதலமைச்சர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று சொன்னார்கள். நான் சொன்ன பதில், செத்தால் தான் என்ன. ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமா என்பதுதான். யார் யார் குண்டு வைத்தார்கள் என்று வீணான கற்பனை செய்து கொண்டு பேசவில்லை. புலன் விசாரணை முடிந்த பிறகு, இரு அறிக்கைகளையும் ஆராய்ந்து, ஒரு அறிக்கையை, அது பற்றி இங்கே சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். குழந்தைகளுக்கு விளையாட்டுக்காட்ட வாங்கிக்கொண்டு வந்தார்கள் என்று சொல்வதெல்லாம் அந்தக் காலத்தில் ராட்சதர்கள் வீட்டில்தான் நடந்தது. மனிதர்கள் வீட்டில் நடக்க முடியாது என்றும் அப்படிப்பட்ட தவறான விவரங்களைச் சொல்ல வேண்டாமென்றும் கூறிக்கொள்கிறேன்.