கலைஞரின் சட்டமன்ற உரைகள்
155
தாலாட்டுப் பாடலிலே போலீஸாருடைய வீட்டிலே யிருக்கின்ற கஷ்டங்களை ஆராரோ பாடுகின்ற அம்மையின் வாயிலாக நான் விளக்கி இருந்தேன். அந்தப் பாட்டோடு நின்று விடாமல் ஆட்சிப் பொறுப்பையேற்ற பிறகு, அதிலும் குறிப்பாக 1969ஆம் ஆண்டு நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற பிறகு அந்தப் பாட்டை நினைவில் வைத்துக் கொண்டு போலீஸாருக்கு உடனடியாக சில வசதிகளை, வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டுமென்பதற்காக போலீஸ் குழு ஒன்றை, காவல் துறை ஆணைக் குழு ஒன்றை அமைத்தேன். திரு. ஆர். ஏ. கோபால சுவாமி, ஐ.சி.எஸ். அவர்களுடைய தலைமையில் சிலம்புச் செல்வர் திரு. ம. பொ. சி. அவர்களும், திரு. கோவிந்தசுவாமிநாதன் அவர்களும், திரு. சந்திரசேகரன் அவர்களும், திரு. என். கிருஷ்ணசாமி அவர்களும் உறுப்பினர்களாகக் கொண்டு, குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினுடைய அறிக்கை 2-1-1971இல் அரசுக்கு அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையிலே 133 பரிந்துரைகள் சொல்லப்பட்டன. அந்தப் பரிந்துரையிலே 122 பரிந்துரைகளை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அப்படி ஏற்றுக்கொண்ட 122 பரிந்துரைகளில் மிக முக்கியமான 15 பரிந்துரைகள் அமுல் நடத்தப்பட்டுவிட்டன என்பதையும் 27 பரிந்துரைகள் இப்போது அமுல் நடத்தப்படுகிற கட்டத்திலே ஒன்றன்பின் ஒன்றாக செய்யப்பட்டு வருகின்றன என்பதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வேன்.
அமுல் நடத்தப்பட்ட அந்த 15 பரிந்துரைகள் ஊதிய விகிதம், பஞ்சப்படியை மாற்றியமைத்தல் ஆகியன. அவர்கள் பாடிக் காட்டினார்கள் 'துப்பாக்கி எடுத்துக்கிட்டுப் போகின்ற உங்க அப்பனிடம் பழம் பாக்கி கேட்டு வருகிறார் கடன்காரர்' என்று சொன்னார்கள். ஏன் அப்படிக் கேட்டு வந்தார்கள் தெரியுமா? அவர்களுக்கு அடிப்படைச் சம்பளம் 1970ஆம் ஆண்டு வரையிலே 70 ரூபாயாக இருந்தது. ஆகவே துப்பாக்கிக்கு முன் பழம்பாக்கிக்காரன் வந்து நின்று கொண்டிருந்தான். இந்த 70 ரூபாய், போலீஸ் கமிஷன் பரிந்துரைகளுக்குப் பிறகு 150 ரூபாயாக அவர்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. (பலத்த கைதட்டல்). முதல் நிலைக் காவலர்களுக்கு 200 ரூபாயாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆகவே, 70 ரூபாய் சம்பளத்திலிருந்த காவல்துறை நண்பனுக்கு