160
காவல்துறை பற்றி
தொலைபேசி வைக்க 10-1-73 அன்று ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. 120 காவல் நிலையங்களுக்குக் கம்பியில்லாத் தந்தி இணைப்புக் கொடுக்க 24-12-71-ல் உத்தரவு தரப்பட்டு இணைப்பு வேலைகள் முடிவடைந்துள்ளன. 1972-73-ல் 270 காவல் நிலையங்கள் கம்பியில்லாத் தந்தி மூலம் இணைக்கப்பட்டுச் செயல்பட விரைவில் உத்தரவு வழங்கப்படும்.
காவல்துறை அதிகாரிகளை எல்லாம், திறமையாகப் பணி யாற்றியவர்களை எல்லாம் நாம் பாராட்ட வேண்டும் - கவுரவிக்க வேண்டும் என்ற கருத்தைக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் திரு. கே.டி.கே. தங்கமணி அவர்கள் இங்கே எடுத்துச் சொன்னார்கள். அதற்காகத்தான் வீரச் செயல் புரிந்தவர்களுக்குத் தகுதியின் அடிப்படையில் பல ஆண்டுக்காலமாக நற்பணியாற்றியவர் களுக்குத் தமிழக அரசின் புதிய திட்டமாக முதலமைச்சர் பதக்கம் என்ற பெயரால் பொற்கிழி அளித்தல், பொற் பதக்கம் வழங்குதல் என்ற புதிய ஏற்பாட்டைச் செய்து ஒவ்வொரு ஆண்டும் அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர்த் திங்கள் 15ஆம் நாள் முதலமைச்சர் பதக்கம், அந்த விருது பெறுகிறவர்களுக்கு விழா நடத்தி வழங்கப்படும் என்று அறிவித்ததற்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது.
வீரச் செயலுக்கான தங்கப் பதக்கமும் ரூபாய் மூவாயிரமும் தரப்பட்டிருக்கிறது.
கடமையுணர்வோடு பணியாற்றியமைக்காக காவலர் களுக்கும், தலைமைக் காவலர்களுக்கும் ரூபாய் ஆயிரமும், பதக்கமும் தரப்படுகிறது. சப்-இன்ஸ்பெக்டர் நிலையில் உள்ளவர் களுக்குப் பதக்கமும் ரூபாய் இரண்டாயிரமும் வழங்கப் பட்டிருக்கிறது. டி.எஸ்.பி. நிலையில் உள்ளவர்களுக்குப் பதக்கமும் ரூபாய் மூவாயிரமும் வழங்கப்படுகிறது. இவர்களில் தீயணைப்புப் படையினரும் சேருகிறார்கள்.
1969-ல் வீரச் செயலுக்கான பதக்கம் இரண்டும், தலை சிறந்த பணிக்கான பதக்கம் இருபதும் வழங்கப்பட்டிருக்கின்றன.
1970-ல் வீரச் செயலுக்கான பதக்கம் நான்கும், தலைசிறந்த பணிக்கான பதக்கம் இருபதும் வழங்கப்பட்டிருக்கின்றன. 1971-ல் வீரச் செயலுக்கான பதக்கம் ஐந்தும், தலைசிறந்த பணிக்கான