உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

காவல்துறை பற்றி

என்ற ஊரின் காவலர் மாரிமுத்து என்பவர் ஒரு முரடனைப் பிடிக்கப் போகும்போது குத்திக் கொல்லப்பட்டார். அவருடைய மனைவிக்கு முதலமைச்சர் பதக்கமும்; 3,000 ரூபாயும் அண்ணா பிறந்த நாள் அன்று வழங்கப்பட்டது. அது தவிர சேம நல நிதியிலிருந்து 2,000 ரூபாயும் வழங்கப்பட்டது.

4-1-69 அன்று ஒரு குற்றவாளியைப் பிடிக்கும்போது ஏற்பட்ட மோதலில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் ராமசாமி கத்தியால் குத்தப்பட்டு இறந்தார். அவருடைய மனைவிக்கு 1970-ல் குடியரசுத் தலைவருடைய வீரப் பதக்கம் வழங்கப்பட்டது. நம்முடைய சேம நல நிதியிலிருந்து 2,000 ரூபாய் வழங்கப்பட்டது.

5-10-70-ல் குற்றவாளியைப் பிடிக்கச் சென்றபோது குத்துண்டு இறந்த வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மனைவிக்குக் குடியரசுத் தலைவருடைய வீரப் பதக்கம் வழங்கப்பட்டது. நமது சேம நல நிதியிலிருந்து 2,000 ரூபாய் தரப்பட்டது.

சிறப்பு ஆயுதப் படையைச் சேர்ந்த துளசிமணி என்பவர் அஸ்ஸாம் மாநிலத்தில் எல்லை காக்கச் சென்று அங்க பணியாற்றிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பால் இறந்தார். அவருடைய குடும்பத்திற்கு நமது சேம நல நிதியிலிருந்து 2,000 ரூபாய் வழங்கப்பட்டது.

5-2-1972-ல் விவசாயப் போராட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் ராமசாமி எதிர்பாராத விதமாக மரணம் அடைந்ததால் அவருடைய குடும்பத்திற்கு சேமநல நிதியிலிருந்து 4,000 ரூபாய் வழங்கப்பட்டது. முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்தும் 5,000 ரூபாய் வழங்கப்பட்டது.

22-11-1972-ல் திருநெல்வேலியில் தலைமைக் காவலர் சங்கரபாண்டின் என்பவர் வன்முறைக் கூட்டத்தால் தாக்கப்பட்டு எதிர் பாராத விதமாகத் துப்பாக்கிக் குண்டிற்குப் பலியாகி மரண மடைந்தார். அவருடைய குடும்பத்தினருக்கு சேம நல நிதியி லிருந்து 4,000 ரூபாய் வழங்கப்பட்டது.