176
காவல்துறை பற்றி
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : விஷம் கொடுத்து கொன்று விட்டார்கள் என்று செய்தி வந்தது. புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் போலீசார் புலன் விசாரித்து, புகார் சரியானதல்ல என்று கூறி, யார் யார் மீது புகார் கொடுக்கப் பட்டதோ, அ.தி.மு.க. கட்சியினர் மீது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டார்கள். ரமணி செத்தது செத்ததுதான். அவர் தி.மு.க. உறுப்பினர். ஆனாலும், தி.மு.க. உறுப்பினர் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதாகப் புகார் கொடுத்திருக்கிறார்கள் என்பதற்காக, அந்தப் புகாரை அப்படியே எடுத்துக் கொண்டு եւ யாரையும் கைது செய்யவும் இல்லை, வழக்குப் போடவும் ல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக கூற முற்பட்டேனே அல்லாமல் வேறு எதுவுமல்ல.
பொதுவாக, இந்த மானியத்தைப் பொறுத்தவரையில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்ற பல்வேறு கருத்துக்களை, நமது திரு. பொன்னப்ப நாடார் சொன்னாலும் சரி, மற்றவர்கள் சொன்னாலும் சரி, அனைத்தும் இன்றைக்கு இந்த அரசால் போலீசார் ஆட்டி வைக்கப்படுகிறார்கள், போலீசார் இந்த அரசால் தூண்டிவிடப் படுகிறார்கள் என்கின்ற இந்தக் கருத்தையே அவர்கள் எதிரொலித்தார்கள்.
எ
காரணம்
காலையில் பேசிய என்னுடைய நண்பர் திரு. காளிமுத்து அவர்கள் கூட, எனக்கு, குருவிற்கு செலுத்த வேண்டிய வணக்கத்தை மரியாதையை எல்லாம் செலுத்திவிட்டு, நான் குருவை எதிர்க்க வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டேனே என்றெல்லாம் இங்கே பேசி, எதிர்ப்பதற்கான ஜனநாயகத்திற்குப் புறம்பாக இந்த அரசு போய்க்கொண்டிருக்கிறது ஆகவேதான் என்றெல்லாம் சொன்னார். 10 நாளைக்குள் அந்த மாற்றம் அவருக்கு ஏற்பட்டது. 10 நாளைக்கு முன்னால் கூட ஒரு கடிதம் எனக் எழுதியிருந்தார். அதிலே கூட அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் சொன்னார். . .
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காத என் தலைவர் கலைஞர் அவர்களுக்கு,
வணக்கம். என் வழிபாட்டுக்குரிய தங்களைப் பற்றி ஒலிக்கின்ற வைக்கப்படுகின்ற தகாத வார்த்தைகளை எல்லாம்
-