உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

காவல்துறை பற்றி

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அதோடு மாத்திரமல்ல பிறகு 10 நாட்கள் கழித்து பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கை; அதன் நகல் கைப்படவே எனக்கு வந்தது.

ர்

"என் உயிரினும் மேலாக நான் ஏற்றுக்கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நான் விலகி புதிய கட்சியில் இணையப் போவதாக வதந்திகள் உலவுவதை அறிகிறேன். தி.மு.கழகம் என் இதயத்துடிப்போடும், இரத்தச் சுழற்சியோடும் இணைந்துவிட்ட ஒன்றாகும். கலைஞர் கருணாநிதி அவர்கள் என் வழிபாட்டிற்குரிய தானைத் தலைவராவார். இதனை விட்டுப் பிரிவது என்பது என்னால் நினைத்துப் பார்க்கவே முடியாததாகும். முன்னேற்றக் கழகத்தை காட்டிலும் இளைஞர் உலகம் ஏற்றுக்கொள்ளத்தக்க முற்போக்குக் கொள்கைகளைக் கொண்ட ஒரு இயக்கம் தமிழகத்தில் கிடையாது. டாக்டர் கலைஞரைக் காட்டிலும் தமிழகத்தின் வழிகாட்டி வேறு எவரும் கிடையாது. எனவே, தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இயக்கத் தோழர்களை வேண்டுகிறேன்.

இவண், கா. காளிமுத்து”.

இது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்த பிறகு அவர் எழுதிய கடிதம்.

திரு. கா. காளிமுத்து : துணைத் தலைவரவர்களே, எந்தச் சூழ்நிலையில் கடிதம் எழுதப்பட்டது என்பது தங்களுக்குத் தெரியும் என்று கருதுகிறேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, எந்தெந்தச் சூழ்நிலையில் என்னென்ன நடந்தது என்று எனக்கும் தெரியும். நாட்டுக்கும் தெரியும். ஏனென்றால் காலையில் போலீஸ் மான்யத்தின்மீது பேசும்போது அதைப் பேசினார் என்பதற்காகச் சொல்லுகிறேனே அல்லாமல் வேறல்ல. இந்த மான்யத்தைப் பொறுத்தவரையில் நான் எடுத்துச் சொன்னேன். காவல் துறையில் உள்ளவர்களை எந்தெந்த அளவுக்கு. .

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : திரு காளிமுத்து எந்த சூழ்நிலையில் அவர் எழுதினார் என்பது