உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

காவல்துறை பற்றி

கலவரங்கள் இந்தச் சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. அப்படி ஏற்படாமல் அந்தந்தக் கட்சியின் தலைவர்கள் அதைப் பாதுகாத்திட வேண்டும். அந்தந்தக் கட்சியின் தலைவர்கள், கட்சியின் தொண்டர்களுக்கு அறிவுரை கூறிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்வேன்

நமது திரு. பொன்னப்ப நாடார் அவர்களுடைய கட்சி, மதிப்பிற்குரிய காமராசர் கட்சி நடத்திய ஊர்வலம் அமைதியாக நடந்தது என்று சொன்னால், அதுகூட பயமாக இருக்கிறது. ஒரு வேளை காமராசர் அவர்களுடைய கட்சியும், கழகமும் இன்றைக்கு ஒன்றாகச் சேர்ந்துகொண்டிருக்கிறதோ என்றெல்லாம் பிரசாரம் செய்கிறார்கள். திரு. பொன்னப்ப நாடார் இங்கே வேகமாகப் பேசியதற்கே கூட ஒரு காரணம் எங்கே இப்படி சந்தேகப்பட்டு விடுவார்களோ என்பதுதான்.

திரு. ஆர். பொன்னப்ப நாடார் : தலைவரவர்களே, அந்த மாதிரி ஒன்றுமில்லை. நான் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி வன்மையாகக் கண்டித்தேனே ஒழிய அந்த மாதிரியல்ல என்று தெரிவித்துக்கொள்கிறேன்

டாக்டர் எச். வி. ஹாண்டே : தலைவரவர்களே, முதலமைச்சர் அவர்கள் ஊர்வலம் அமைதியாகச் சென்றால் எந்த விதமான தொல்லையும் கொடுப்பதில்லை என்று சொன்னார்கள். ஆனால் 9-ம் தேதி நடந்த விவசாயிகள் ஊர்வலத்தில் மதிப்பிற்குரிய காமராசர் தலைமையில் நடத்திய ஊர்வலத்தில் நாங்கள் கூட இருந்தோம். ஊர்வலம் போகிற நேரத்தில் வழியில் பல இடங்களில் வழிமறித்து, பிளாசா தியேட்டருக்கு அப்புறம் சைக்கிள் டயரில் பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்துக் கொளுத்தி மெத்தைமேலிருந்து ஊர்வலத்தின்மேல் போட்டு சிதற வைத்தார்கள்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : ஆகஸ்ட் 15 சுதந்திரதினத்தன்று ஓர் ஊர்வலம் நடத்தினார்கள். அப்போது அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தார்கள். அண்ணா அவர்களும், நானும், நாவலரும், மதி உட்பட மற்ற அமைச்சர் களும் கவர்னர் வீட்டில் இருந்தோம். கவர்னர் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்தார்; அதில் கலந்து கொள்வதற்காக அங்கே