உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

காவல்துறை பற்றி

மணிக்குள் செல்வதற்காகத் தயார் படுத்திக்கொண்டு 3 மணிக்குக் காரில் ஏறி உட்காருகிறேன்.

"கறுப்புக்கொடி பிடித்தவர்கள் அங்கிருந்து வந்து குறுக்கே நிற்கிறார்கள். ஆகவே அசம்பாவிதம் ஏற்படும்" என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் தடுக்கப்பட வேண்டும். கறுப்புக்கொடி காட்டட்டும். அது ஜனநாயக ரீதியில் அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஆனால் அதிலே பலாத்காரம், கல் எறிதல், கலகம் விளைவித்தல் என்றிருக்கக் கூடாது. மதி அவர்கள் கூடச் சொன்னார்கள்; மன்னையின் நெற்றியில் காயம் ஏற்பட்டிருக்கின்றது என்று வருத்தத்தோடு சொன்னார்கள். இதெல்லாம் விளையாட்டுச் செய்திகளா?

அமைச்சர்கள் கலந்துகொண்ட பல கூட்டங்கள் கல்லெறிக்கு ஆளாகின்றன. நண்பர் வேழவேந்தன் அவர்களின் கார் தீ வைத்து அடியோடு கொளுத்தப்பட்டது. அந்தக் கார் எதற்கும் பயனில்லை என்ற அளவுக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எந்தத் தரப்பிலும் இப்பேர்ப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாமல் தடுக்கப் பாடுபடுவது ஒவ்வொரு அரசியல் வாதிகளின் கடமை. ஆகவே, போலீசார் கடுமையாக நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால் நான் இந்த மாமன்றத்திலே தெரிவித்துக் கொள்வேன். வன்முறையிலே யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது போலீசார் தயவுதாட்சணியமின்றி நடவடிக்கை எடுப்பார்கள், எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைத்தான் இந்த மாமன்றத்தின் மூலம் பிரதிபலிக்கிறேன்.

இன்னொரு கருத்தும் சொல்லப்பட்டது. இரவெல்லாம் கூட்டங்கள் நடைபெறுகின்றன என்று திரு. நாடார் அவர்கள் சொன்னார்கள். அதுபற்றி ஏற்கெனவே ஐ. ஜி. அவர்கள் மூலம் அறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. சென்னை நகரில் இரவு 10 மணியோடு கூட்டம் முடிவுற வேண்டும் என்றும், திருச்சி, கோவை, மதுரை, சேலம் போன்ற பெரிய நகரங்களில் 10 மணியோடு கூட்டம் முடிவுற வேண்டுமென்றும், மற்ற வெளியூர் களில் இரவு 11 மணியோடு கூட்டம் முடிவுற வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆணையை யார் மீறினாலும்