உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

காவல்துறை பற்றி

குற்றங்கள் 890, விசாரணைக்குப் பின் உண்மை என தெரிந்தவை 662, கண்டுபிடிக்கப்பட்டவை 622, விசாரணைக்குப்பின் தண்டிக்கப்பட்டவர்களின் சதவீதம் 63.11 அந்த அளவுக்கு குற்றவாளிகளைக் கண்டுபிடித்தும் தண்டனை அளிப்பதிலும் தமிழ்நாடு முன்னணியில் நிற்கிறது.

கொள்ளைக் குற்றத்தை எடுத்துப்பார்த்தால் - உத்திரப்பிர தேசத்தில் பதிவானவை 5,202. உண்மை என விசாரணைக்குப் பின் தெரிந்தவை 1,869. அதில் கண்டுபிடிக்கப்பட்டவை 1,027. தண்டிக்கப்பட்டவர்களின் சதவீதம் 37.99.

பீகாரில் 1970-ல் பதிவான கொள்ளைக் குற்றங்கள் 1,626. உண்மை எனத் தெரிந்தவை 963. கண்டுபிடிக்கப்பட்டவை 263. தண்டிக்கப்பட்டோர் சதவீதம் 52.

இதில் தமிழ்நாட்டை ஒப்பிடும்போது 1970-ல் பதிவான கொள்ளை குற்றங்கள் 94. உண்மை என தெரிந்தவை 20. அதில் கண்டுபிடிக்கப்பட்டவை 19. விசாரணைக்குப் பின்

தண்டிக்கப்பட்டோர் சதவீதம் 77.78.

அடுத்து வழிப்பறிக் குற்றங்கள் -

1970-ல் உத்திரப்பிரதேசத்தில் பதிவான குற்றங்கள் 9,710. உண்மை என தெரிந்தவை 3,722. கண்டுபிடிக்கப்பட்டவை 986. விசாரணைக்குப்பின் தண்டிக்கப்பட்டோர் சதவீதம் 43.90.

இதைப்போலவே மராட்டியம், பீகார் போன்ற மாநிலங்களில் அதிகமாகக் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

கேரளத்தில் பதிவான குற்றங்கள் 154 அவைகளில் உண்மை எனத் தெரியவந்தவை 78. அதில் கண்டுபிடிக்கப் பட்டவை 61, தண்டிக்கப்பட்டோர் சதவீதம் 32.20.

தமிழ் நாட்டில் 1970-ல் பதிவான வழிப்பறிக் குற்றங்களின் எண்ணிக்கை 107. அதில் விசாரணைக்குப் பின் உண்மை என்று தெரிந்த குற்றங்கள் 93. அதில் கண்டுபிடிக்கப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 80. குற்றங்களின் விசாரணைக்குப் பின் தண்டிக்கப் பட்டவர்களின் சதவீதம் 72.50

மொத்தத்தில் குற்றங்களின் பட்டியல் -