200
காவல்துறை பற்றி
ஒத்திவைப்புத் தீர்மானம் இதுபற்றி வந்தபொழுது, குடியாத்தம் தீவிபத்து பற்றிப் பேசியிருக்கிறேன். பிரதமர் இலட்சம் ரூபாய் அளித்திருக்கிறார், காங்கிரஸ் கட்சி 10,000 ரூபாய் அளித்திருக்கிறது, முதலமைச்சர் நிதியிலிருந்து இலட்சம் ரூபாய் அளிக்கப்பட் டிருக்கிறது என்று அறிவித்தேன். ஆனால், பொன்னப்ப நாடார் பேசும்பொழுது பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் கொடுத்த இலட்சம் ரூபாய் தெரிந்தது, காங்கிரஸ் கட்சி கொடுத்த 10,000 ரூபாய் தெரிந்தது, ஆனால் உடனடியாக முதலமைச்சர் நிதியிலிருந்து கொடுத்த இலட்சம் ரூபாய் அவருக்குத் தெரியாமல் போய்விட்டது என்பதற்காக வருந்துகிறேன்.
திரு. ஆர். பொன்னப்ப நாடார் : உண்மையிலேயே விடுபட்டுப்போய்விட்டது. அதைத் திருத்திக்கொள்வதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அவர்கள் இன்னும் கஷ்டப்படு கிறார்கள். எனவே, இன்னும் அதிகமாக அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : வேண்டு மென்றே விட்டுவிட்டதாக நான் சொல்லவில்லை. நாங்கள் செய்வது அவர்கள் நினைவிற்கு வருவதில்லை, அதற்காகத்தான்
சொன்னேன்.
தீயணைக்கும் படை இயந்திரங்களை அதிகப்படுத்த வேண்டுமென்று கேட்டார்கள்.
திரு. கே. டி. கே. தங்கமணி : குடியாத்தம் தீ விபத்திற்குப் பிறகு பல இடங்களில் விபத்துக்கள் நடக்கின்றன. இன்றைக்குக் காலையிலே பத்திரிகையிலே ஒரு செய்தி வந்திருக்கிறது. ஆம்பூரிலே விபத்து ஏற்பட்டு, சந்தேகப்பட்டு அங்கு சாதாரணமாகப் போன ஒரு ஆளைப் பிடித்து அடித்துக் கொன்றிருக்கிறார்கள். எனவே, இப்படிப்பட்ட விபத்துகள் எப்படி ஏற்படுகின்றன என்று அரசாங்கமே அறிக்கை கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுமா ? அப்படி ஒரு கமிஷன் தீர்ப்பு இருந்தால் இம்மாதிரி ஏற்படாது அல்லவா ? எனவே விசாரணை கமிஷன் வைக்கும் கருத்து இருக்கிறதா ?
மு. கருணாநிதி
தி
மாண்புமிகு கலைஞர் மு. : தீ விபத்துகளைப்பற்றி நான் போலீஸ் உயர் அதிகாரிகளோடு