202
காவல்துறை பற்றி
விபத்து ஏற்பட்டால் அதற்கு யாராவது ஒரு அதிகாரியாவது இருக்க வேண்டும், ஒரு அதிகாரி லீவில் போகலாம்.
டாக்டர் எச். வி. ஹாண்டே : முதலமைச்சரவர்கள் சொல்லும்பொழுது தீ விபத்து எங்கே வருகிறது என்று ஜோசியம் பார்க்க முடியாது என்று சொன்னார்கள். அது உண்மைதான். கண்டுபிடிக்க முடியாதுதான். ஆனால் சென்ற நான்கைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து, மற்ற மாநிலங்களில் இருப்பதைவிட, மற்ற விஷயங்களுக்கு மற்ற மாநிலங்களை ஒப்பிடுவதால் சொல்கிறேன், மற்ற எல்லா மாநிலங்களையும்விட ஜாஸ்தியாக இங்கேதான் குடிசைகள் தீ விபத்தில் சிக்கிக்கொண்டிருக்கின்றன. தங்கமணி அவர்கள்கூட அதற்காகத்தான் சொன்னார்கள். அதற்கு ஏதாவது கண்டுபிடித்து அந்தத் தீ விபத்துக்கள் வராத வகையிலே ஏதாவது முதலமைச்சரவர்கள் திட்டம் வைத்திருக்கிறார்களா என்பதை விளக்கமாகச் சொன்னால் நல்லது.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : 1967-ல் கழகம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் சென்னை மாநகரமெங்கும் குடிசைகள் தீபற்றி எரிந்தன தொடர்ந்து தமிழகத்திலே பல்வேறு இடங்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்டன. அதற்குப் பிறகு கடந்த நான்கைந்து ஆண்டுக் காலமாக அந்த அளவிற்கு இல்லாமல் படிப்படியாக அது குறைந்திருக்கிறது.
சென்னையைப் பொறுத்தவரையில், குடிசைமாற்று வாரியம் அமைக்கப்பட்டு, குடிசைகளெல்லாம் மாற்றப்பட்டு நல்ல கட்டிடங்கள் கட்டித்தந்த அந்த முயற்சிக்குப் பிறகு சென்னை மாநகரத்தில் தீ விபத்துக்கள் வேகமாகக் குறைந்திருப்பதையும் தீ நாம் காண்கிறோம்.
குடியாத்தத்தைப் பொறுத்தவரை அதுபற்றி முதல் நாள் பேசும்போது கே.டி.கே. அவர்கள் சொன்னார்கள் சதி இருக்கக் கூடும், ஆராய வேண்டும் என்று கூடச் சொன்னார்கள். அந்தப் பகுதி மக்களும் அப்படித்தான் எண்ணுகிறார்கள். ஆனால் இப்படிச் சொல்லுகிற நேரத்திலே பாதிக்கப்பட்ட மக்கள் தவறாகக் கருதிக்கொள்ளக் கூடாது. ஒருசில இடங்களில் தங்களுடைய குடிசைகள் தீ விபத்துக்கு ஆளாக வேண்டுமென்று கருதுகிற உணர்வு சிலரிடத்தில் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், நல்ல நிதி