208
காவல்துறை பற்றி
அப்படித் தவறு செய்யக்கூடிய அதிகாரிகளை சுட்டிக்காட்டினால் அவர்களைத் தண்டிக்க, கண்டிக்க இந்த அரசு கடமைப் பட்டிருக்கிறது.
அதிகாரிகளைப் பொறுத்தமட்டில், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் எவ்வளவு நண்பர்களாக இருந்தாலும், ஆருயிர் தோழர்களாக இருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுத்து பழக்கப்பட்ட அரசியல் இலக்கணம் வகுத்த அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். (கைதட்டல்).
ஆகவே, அச்சமின்றி இப்படிப்பட்ட விவகாரங்களை நீங்கள் எங்களிடம் எடுத்துச்சொல்லலாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர் ஹாண்டே அவர்கள் இங்கே இரண்டொரு குறிப்புகளை எடுத்துச்சொல்லி இதற்கெல்லாம் முதல் அமைச்சர் அவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார், என்று கேட்டார்கள்.
ஒன்று பார்க்கிறேன். இந்த மானியத்தை ராஜிநாமாவி லிருந்து ஆரம்பித்து நம்முடைய கே. டி. கே. தங்கமணி அவர்கள் இந்த மானியத்தில் பேசும்போது நீங்கள் அதிகச் சுமையைத் தாங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கூறினார்கள். என்மீது அவருக்கு ஏற்பட்ட இந்தப் பரிதாபத்திற்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் என்னை அவர்கள் உணர்வார்கள். ஆகவே, இந்தப் பரிதாபத்தோடு அதிகச் சுமையைத் தாங்கிக்கொண்டிருக்கிறீர்கள், இலாகாவை மாற்றிக்கொடுங்கள் என்று அவர்கள் சொன்னார்கள்.
ஆனால் ஹாண்டே அவர்கள் ராஜிநாமாவும் வேண்டாம். இலாகா மாற்றமும் வேண்டாமென்று கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து குறைந்தபட்சம் ஒரு மன்னிப்பாவது கேட்டுக்கொள்ளுங்கள் என்றளவிற்கு அவர்கள் தமது கருத்தைச் சொன்னார்கள். இரண்டு மூன்று குற்றங்களை எடுத்துச்சொல்லி இவைகளைப் பற்றியெல்லாம் விசாரிக்கவேண்டும், என்ன அக்கிரமங்கள் நடைபெறுகின்றன என்றெல்லாம் சொன்னார்கள்.
நான் உடனடியாக அவைபற்றி விசாரித்தேன்.