உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

21

அப்ளிகேஷன் போடவில்லையோ என்னவோ தெரியவில்லை. அதைப்பற்றியும் அமைச்சர் அவர்கள் விளக்குவார்கள் என்று நினைக்கிறேன். போலீசுக்கு கொடுக்கிற மாதச் சம்பளம், யூனிபார்ம் அலவன்ஸ், வைத்திய வசதி, கல்வி வசதி, இவைகளை எல்லாம் சேர்த்து கணக்கிட்டால் கூட 102 ரூபாய் வரையில்தான் பெறுகிறார்கள். இந்தச் சம்பளத்தைக் கொண்டு அவர்களுடைய குடும்பத்தை நடத்த முடியுமா? அவர்கள் ஏற்கெனவே வீட்டு வசதி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள், என்பதை எங்கள் கட்சியில் இருக்கின்ற “போலீஸ்” நண்பராக இருந்த திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிட்டார்கள். அவர்களுடைய வீட்டில் போடப்படும் மின்விளக்கு 25 சக்தியுள்ளதாகத்தான் இருக்கிறது. இந்த மின் விளக்கை வைத்துக்கொண்டு எவ்விதம் குடும்பத்தை நடத்துவது. பல போலீஸ்காரர்கள் வீட்டுவசதியில்லாமல் மிகவும் கஷ்டப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பலவிதமான கஷ்டமான சூழ்நிலையில்தான் அவர்கள் தங்கள் குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். சட்டசபையில் நடமாடுகின்ற போலீஸ்காரர்களைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு இப்போது நாள் ஒன்றுக்குக் கொடுக்கப்படுகின்ற படிச்செலவு 10 அணா. இது போதுமா என்பதை அமைச்சர் அவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இங்கே வேலை பார்க்கின்ற பல போலீஸ்காரர்கள் நெடுந்தூரத்தில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு எந்தவிதமான பஸ் வசதியும் ப்போதில்லை. ஆகவே, அவர்களுக்கு பஸ்ஸில் வருவதற்கு பாஸ் வசதியாவது செய்து கொடுக்க வேண்டும். இம்மாதிரிப்பட்ட தேவைகளை எல்லாம் அவர்கள் என்னிடத்தில் வந்து சொன்னார்களா என்று கேட்டு, அப்படி இவர்களிடம் போய் சொல்லிவிட்டார்களா என்று நினைத்து, அதற்காக கொடுக்க மாட்டோம் என்று இருந்துவிடாதீர்கள். உண்மையில் அவர்கள் இவ்விதம் உணருகிறார்கள். அதைத்தான் இந்த அமைச்சர வைக்கும் கனம் சபாநாயகர் அவர்கள் மூலமாக தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்கள் அதிக நேரம் வேலை செய் கின்றார்கள் என்றால் அவர்களுக்கு தொழிலாளர்களுக்கு அளிக்கப்படுவது போல் 'ஓவர் டைம் அலவன்ஸ் போன்ற வசதிகள் அளிக்கப்படவேண்டும் என்பதோடு, வர்களுடைய பிரச்சினைகளையும் தொழிலாளர்களுடைய பிரச்சினைகளைப் போன்று கவனிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துக்