220
காவல்துறை பற்றி
நவீன கருவிகள் காவல் துறைக்கு வழங்கப்படுவதன் மூலம் இன்னும் இந்தத் துறை செம்மையாகச் செயல்படக் கூடும் என்ற வகையில் 1971-72-ம் ஆண்டில் கம்பியில்லாத் தந்திக் கருவிகள், குற்றம் சார்ந்த அறிவியல் ஆய்வுக்கூடக் கருவிகள், நிழற்படக் கருவிகள், இவைகளுக்கு மாத்திரம் இந்த அரசு செலவு செய்த தொகை ரூ. 24,87,228.
1972-73-ல் பிராட்மா இயந்திரங்கள், நுண் திரைப்படக் கருவிகள், ரசாயன ஆய்வுக்கூடக் கருவிகள் ஆகியவை களுக்காக செலவிட்ட தொகை ரூ. 35,29,786.
1973-74-ல் மேலும் செலவிட்டது இதற்காக 43 லட்ச ரூபாய்.
1974-75-ல் நுண் மின் அலைத் திட்டம் என்கிற நவீன முறையைப் புகுத்துவதற்காக ஏறத்தாழ செலவு 251/2 லட்ச ரூபாய்; ஆக, இந்த வகையில், 1 கோடியே 29 லட்சம் ரூபாய் வரையில் நவீன கருவிகளைக் காவல் துறையில் பயன்படுத்த அரசின் சார்பில் நாம் செலவிட்டு இருக்கின்றோம்.
1971-ம் ஆண்டுதான் முதன்முதலாக 100 கிராம காவல் நிலையங்களுக்கு - ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் ஒரு மோட்டார் சைக்கிள் வேண்டும் என்ற கோரிக்கை இந்த மாமன்றத்தில் எழுப்பப்பட்டு, அதை நாம் ஏற்றுக்கொண்டு - 100 மோட்டார் சைக்கிள்களை அனுமதித்து, நாம் வழங்கினோம். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து இது வரையில் 440 மோட்டர் சைகிள்கள் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன மொத்தமுள்ள 863 காவல் நிலையங்களில் 440 நிலையங்களுக்கு இப்போது வழங்கப்பட்டு இருக்கின்றன. 1975-76-ல் மேலும் புதிதாக 50 மோட்டார் சைக்கிள்கள் போலீஸ் ஸ்டேஷன்களுக்காக வழங்கப்பட இருக்கின்றன. இதையும் சேர்த்து, 490 மோட்டார் சைக்கிள்கள் நாம் வழங்குவது காவல் துறையின் சம்பவங்கள் நடைபெற்று விடுகின்ற இடங்களுக்குச் செல்லுகின்ற நேரத்தில் விரைவாகத் தங்களுடைய பணியைச் செய்ய உதவும்.
இதைப்போலவே, காவல் துறையினருக்கு சைக்கிள்கள் வேண்டும். அதை இந்த அரசு ஒப்புக்கொண்டு, அவர்களுக்கு