உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

காவல்துறை பற்றி

திரும்ப நான் படிக்க விரும்பவில்லை - தமிழ்நாட்டில் தான் 61 சதவீதம் கொலை குற்றங்களில் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தை இந்தப் புத்தகத்தில் நாம் காண முடியும்.

இதைப் போலவே கொள்ளை என்று எடுத்துக் கொண்டால், பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் 1971ஆம் ஆண்டு பதிவான குற்றங்கள் 6,004. இதிலே 34 சதவீதம்தான் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பீஹாரில் 2,015 கொள்ளை குற்றங்கள் பதிவானவை. இதிலே தண்டிக்கப்பட்டவர்கள் 44 சதவீதம்.

ஆனால் தமிழ்நாட்டில் கொள்ளை என்ற வகையில் பதிவான குற்றங்கள் 22. இதிலே 57 சதவீதம் பேர்கள் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பதிவான குற்றங்கள் 124, இதிலே 68.54 சதவீதம் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தீண்டாமை ஒழிப்புச் சட்ட குற்றங்களைப் பற்றி இங்கு சில உறுப்பினர்கள் எடுத்துச் சொன்னார்கள். திரு. கே. டி. கே. அவர்களும் இதுபற்றி எடுத்துச் சொன்னார்கள். தீண்டாமை ஒழிப்புக் குற்றங்கள் எவ்வளவு கடுமையாகப் பாவிக்க வேண்டும் என்பதில் இந்த அரசு எப்போதும் பின் வாங்காது என்பதை நான் அடிக்கடி எடுத்துக் காட்டியிருக்கிறேன்.

1967ஆம் ஆண்டு 134 குற்றங்கள் பதிவாகி அதிலே கோர்ட்டில் 129 குற்றங்கள் தாக்கல் செய்யப்பட்டு 94 குற்றங்கள் தான் தண்டிக்கப்பட்டிருக்கின்றன.

1968-ல் 37 குற்றங்கள் பதிவாகி, 37 கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு, 19 குற்றங்கள்தான் தண்டிக்கப்பட்டன.

1972, 1973, 1974 ஆகிய இந்த 3 ஆண்டுகளை கணக்குப் பார்த்தால் 1972இல் பதிவான குற்றங்கள் 882, இதிலே கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது 872. இதிலே தண்டிக்கப்பட்டது 590.

1973இல் 1,633 குற்றங்கள் பதிவாகி, 1,628 குற்றங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு, 1,117 குற்றங்கள் தண்டிக்கப் பட்டன.