உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

காவல்துறை பற்றி

இப்படி யோசனை சொல்வது சரியல்ல. புதிய சிலைக்கு எண்ணெய் தடவி, கறுப்பாக்கி விற்கச் சொல்கிறார்கள். இது நல்ல யோசனை அல்ல. திருடி விற்கிறவர்களுக்கு வேண்டுமானால் இது பயன்படும் யோசனையாக இருக்கலாம்.

திரு. கே. டி. கே. அவர்கள் கேட்டபடி வேறு யாராவது அப்படித் திருடச் சொன்னாலும், அது நிரூபிக்கப்படுமானால் அவர்கள் மீதும் வழக்கு போடப்படுகிறது. அதிலும் போலீசார் தீவிரமாக இருக்கிறார்கள். இன்னும் தீவிரமாக இருக்க வேண்டு மென்ற அடிப்படையில் நான் போலீசாரை அழைத்துப் பேசியிருக்கிறேன்.

திரு. கே. டி. கே. அவர்கள் நடன ஆசிரியர் மலேஷிய மகாலிங்கம் மரணம் குறித்துச் சொன்னார்கள். போலீஸ் அறிக்கையில், போலீஸ் போலீஸ் கமிஷனர் கமிஷனர் தவறான அறிக்கை கொடுத்தார்; பின் மாற்று அறிக்கை கொடுத்தார் என்று சொன்னார்கள். நான் பத்திரிகைகளை தேடச் சொன்னேன். மலேஷிய மகாலிங்கம் பற்றிய செய்தியை எடுத்துவா என்று சொன்னால் என் வீட்டிலிருந்த பையன் மலேஷிய சாம்பசிவம் கொல்லப்பட்டது பற்றி எடுத்து வந்தான். உள்ளபடியே கே. டி. கே. அவர்கள் மலேசிய சாம்பசிவத்தைப் பற்றி பேசியிருந்தால் நான் ரொம்ப மகிழ்ச்சியடைந்திருப்பேன். ஏனென்றால் மலேசியா சாம்பசிவம் மலேஷிய கணபதியோடு அங்கு உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டு, கணபதி தூக்குக்குப் போன பிறகு, இந்திய அரசின் கருணை காரணமாக விடுவிக்கப் பட்டு, தமிழ்நாட்டுக்கு வந்தார். அவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் - அந்த எண்ணங்கள் கொண்டவர். ரொம்ப கஷ்டத்தில் இருந்தார். கஷ்டப்படும் போது எனக்குக் கடிதம் எழுதினார். நான் உடனே முதலமைச்சர் அவர் நிதியிலிருந்து ஓரளவிற்கு உதவி செய்தேன். அதுகுறித்து திரு. கே. டி. கே. தங்கமணி அவர்கள் என்னிடம் அதைப் பாராட்டிக் கூடச் சொல்லியிருக்கிறார்கள். அவரைத் திடீரென்று ஒருநாள் வட ஆற்காடு மாவட்டத்தில் எதிரிகள் சிலபேர் கொன்று விட்டார்கள் என்று சொல்லப்பட்டது. அதைக் கேள்விப்பட்டு நான் மெத்த வருத்தப்பட்டேன். இது மலேஷிய சாம்பசிவம் விவகாரம்.