244
காவல்துறை பற்றி
க்ளைவ் ஹாஸ்டல் சம்பந்தமாக அவைகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க திரு. கார்த்திகேயன் ஐ. ஏ. எஸ். அவர்களிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதிலே ஐ. ஏ. எஸ். ஐ. பி. எஸ். அலுவலாளர்கள் இருக்கின்ற காரணத்தால் யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷனையும் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பதால் அவைகளைப் பற்றி திரு. கார்த்தி கேயன் பரிசீலித்துக் கொண்டிருக்கிறார்.
அரசியல் கிளர்ச்சிகளைப் பற்றி எல்லாம் சொன்னார்கள். தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு அரசியல் கிளர்ச்சிகளில் இந்த அரசு நான் அடிக்கடி சொல்வதைப்போல்
“கடிதோச்சி மெல்ல எறிக”
என்ற குறள்மொழிக்கேற்ப நடந்து வந்திருக்கிறது.
7-8-1970-இல் வலது கம்யூனிஸ்டுக் கட்சி நடத்திய நிலப்பறிப் போராட்டத்தில் 12,757 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் எல்லாம் 30-8-1970 அன்று விடுதலை செய்யப் பட்டார்கள்.
தண்டனைக் காலம் முடிகின்ற வரை இருந்துதான் தீர வேண்டுமென்று யாரையும் வைக்கவில்லை. முன்பு நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போதெல்லாம் அப்படி இல்லை, நாங்கள் எல்லாம் 3 மாத காலம் என்று தண்டிக்கப்பட்டால் அதிலே ஒரு மணி நேரம் கூடக் குறைவாக யாரும் எங்களை விடுதலை செய்தது கிடையாது. இன்றைக்குத்தான் இந்த அரசு தண்டனைக் காலம் முடிவதற்குள்ளாக அரசியல் கைதிகளை விடுதலை செய்கிற அந்த முறையை ஏற்படுத்தியிருக்கிறது.
உள்நாட்டு ஒத்துழையாமை இயக்கம் என்ற பெயரால் சம்யுக்த சோஷலிஸ்டுக் கட்சியின் முன்னாள் தலைவர் திரு. நல்ல சிவம் அவர்களும் மற்றம் ஐவரும் கைது செய்யப்பட்டு அன்று மாலையே விடுதலை செய்யப்பட்டார்கள்.
திரு. கே. டி. கே. தங்கமணி : அந்தப் போராட்டத்தில் நாங்கள் எல்லாம் கைது செய்யப்பட்டோம். ஆனால் தண்டிக்கப் படாமல் விடுதலை பெற்றோம். ஆகவே தண்டிக்கப்பட்டு, விடுதலை பெற்றோரும் என்று சொல்வது உண்மையல்ல.