உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

காவல்துறை பற்றி

கிளர்ச்சிகள் நடைபெற்று, அதிலே கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதைப் போலவே, மாணவர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்ட வழங்குகள் 50-க்கு மேல் கைவிடப்பட்டிருக்கின்றன. தொழிலாளர்கள் மீகு கனிவு கொண்ட பல தலைவர்கள் இங்கே இருக்கிறார்கள், எதிர்க் கட்சியிலும் சரி, ஆளுங்கட்சியிலும் சரி, அந்த வரையில்கூட தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் - நான் தேதி வாரியாக வைத்திருக் கிறேன் 50க்கு மேற்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டன என்று நான் கூறிக்கொள்வேன்.

-

சட்டக் கல்லூரி மாணவர்கள் விடுதி - போராட்டம் பற்றி பொன்னப்ப நாடார் அவர்களும் ஹாண்டே அவர்களும் இங்கே பேசினார்கள். வகுப்பு வெறி இன்றைக்குக் கல்லூரிகளிலே நுழைந்திருப்பது உள்ளபடியே, மிகமிக வேதனை தரக்கூடிய ஒன்றாகும். பெரியார் அவர்களும், அண்ணா அவர்களும், ஏன் காந்தியடிகள் போன்றவர்களும் அவர்கள் வழி வந்தவர்களும், மற்றக் கட்சித் தலைவர்களும் இன்றைக்குச் சாதி பேதம், சாதி வெறி கூடாது என்பதற்காக உழைத்து வருகிறோம். ஆனால் நம்மையும் அறியாமல் இன்றைக்கு இப்படிப்பட்ட வகுப்புவாத குரோத எண்ணங்கள் நம்முடைய சமுதாயத்திலே ஊடுருவுவது இந்தச் சமுதாயத்திற்கு ஏற்படுகிற ஒரு பயங்கரமான புற்று நோய் என்றுதான் நான் கூற விரும்புகிறேன்.

இந்த அரசைப் பொறுத்தவரையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுகிற அரசு என்று நான் பலமுறை அழுத்தந்திருந்தமாக எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதிலே வேடிக்கை என்னவென்றால், எந்தப் பின் தங்கிய மக்களுக்காகப் பாடுபடுகிறோமோ, அந்தப் பின்தங்கிய மக்களே இரண்டு கூறுகளாக, மூன்று கூறுகளாகப் பரிந்து கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதும், எந்தத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காப் பாடுபடுகிறோமோ, அந்தத் தாழ்த்தப் பட்ட மக்களே அவர்களுக்குள் இரண்டு கூறுகளாக, மூன்று கூறுகளாகப் பிரிந்து கொண்டு, அவர்களுக்குள் சச்சரவுகளை வளர்த்துக் கொள்வதும் விரும்பத்தக்கக் காரியமல்ல.